AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடா?”.. முதல்வர் மருந்தகங்களில் நிலவும் அவல நிலையால் மக்கள் கடும் அவதி!!

Chief Minister pharmacy Madurai: மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களில் சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தனியார் கடைகளில் கூடுதல் விலை கொடுத்து மருந்துகளை வாங்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

“உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடா?”.. முதல்வர் மருந்தகங்களில் நிலவும் அவல நிலையால் மக்கள் கடும் அவதி!!
முதல்வர் மருந்தகம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Nov 2026 13:48 PM IST

மதுரை, நவ.11: தமிழக அரசு பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தரமான உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வந்தன. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது மாதாந்திர மருத்துவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள இந்த மருந்தகங்கள் பேருதவியாக அமைந்திருந்தன. ஆனால், தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள சில முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அவசியமான மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிக்க: “கும்பகர்ண தூக்கத்தில் தமிழக அரசு!”.. எங்கு பார்த்தாலும் கொலை, கஞ்சா விற்பனை.. தமிழக அரசை விளாசிய இபிஎஸ்!!

காலாவதி சிக்கல் குறித்த குற்றச்சாட்டுகள்:

மதுரை மாவட்டத்தில் செயல்படும் முதல்வர் மருந்தகங்களில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் எவையும் போதிய அளவில் இருப்பில் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தற்போது உள்ள மருந்துகள் அனைத்தும் வரும் டிசம்பர் 2026 மாதத்துடன் காலாவதியாகும் தகுதியைக் கொண்டவை மட்டுமே இருப்பதாகவும், புதிய மருந்துகள் எவையும் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மருந்தகங்கள் தொடங்கப்பட்ட ஆரம்ப காலகட்டங்களில் சீராகவும் தடையின்றியும் விநியோகிக்கப்பட்டு வந்த மருந்துகள், தற்போது முடங்கிக் கிடப்பது நோயாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

கூடுதல் விலை கொடுத்து வாங்கும் அவலம்:

அரசு மருந்தகங்களை நம்பிச் செல்லும் ஏழை எளிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள், அங்கு மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் வேறு வழியின்றித் தனியார் மருத்துவக் கடைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் மருந்தகங்களில் இதே போன்ற உயிர்காக்கும் மருந்துகளுக்குப் பல மடங்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சாதாரண பொதுமக்களால் அவற்றை வாங்குவது பொருளாதார ரீதியாகப் பெரும் சுமையாக மாறியுள்ளது. மாதாந்திர மருத்துவச் செலவுகளுக்கே தங்களின் முழுச் சம்பலத்தையும் அல்லது ஓய்வூதியத்தையும் செலவிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் சினிமா பாணியில் அரங்கேறிய துணிகர கொள்ளை.. டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.5 கோடியுடன் கார் கடத்தல்!!

மக்களின் கோரிக்கையும், உடனடித் தேவையும்:

தொடர்ந்து மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனை குறித்துத் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. முதல்வர் மருந்தகங்களுக்குத் தேவையான அனைத்து உயிர்காக்கும் மருந்துகளையும் தங்குதடையின்றி உடனுக்குடன் விநியோகிக்கவும், புதிய மருந்துகளைக் கொள்முதல் செய்யவும் உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் உயிர் காக்கும் அத்தியாவசியத் தேவையாக விளங்கும் மருத்துவ விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிகத் தட்டுப்பாட்டிற்கு அரசு விரைவில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Follow Us