AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தென்காசியில் அதிர்ச்சி.. மாவட்ட நூலகத்தில் 2200 போலி நூல்கள்.. அகல் விளக்கு பதிப்பகத்துடையது!

Tenkasi District Library Fake Books Removed : தென்காசி மாவட்ட நூலகத்தில் இருந்து அகல் விளக்கு பதிப்பகத்தில் வாங்கப்பட்டிருந்த சுமார் 2200 போலி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. இது நூலகவாசகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசியில் அதிர்ச்சி.. மாவட்ட நூலகத்தில் 2200 போலி நூல்கள்.. அகல் விளக்கு பதிப்பகத்துடையது!
தென்காசி மாவட்ட நூலகம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Nov 2026 14:15 PM IST

தென்காசி மாவட்ட மத்திய நூலகத்தில் ஊழியர்கள் மேற்கொண்ட சோதனையில் சுமார் 2200 போலி நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்தும் அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து வாங்கப்பட்டவை ஆகும். கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை போலி பதிப்பகத்தில் இருந்து வாங்கப்பட்ட நூல்கள் என்றும், செயற்கை நுண்ணறிவு மூலமாக தயாரிக்கப்பட்ட நூல்கள் என்றும் பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், இந்த விவகாரத்தில் பெரும் ஊழல் நிகழ்ந்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு நூலகங்களிலும் போலி நூல்கள் உள்ளனவா என்பது தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்ட மத்திய நூலகத்தில் 2200 போலி நூல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட நூலகத்தில் போலி நூல்கள்

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய மாவட்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் போலி நூல்கள் ஏதேனும் உள்ளனவா என்பது தொடர்பாக நூலக ஊழியர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், விளக்கு அகல் விளக்கு பதிப்பகத்தில் இருந்து சுமார் 2200 போலி நூல்கள் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நூல்கள் அனைத்தும் போலியானவை என்று வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த 2200 நூல்களும் செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்பட்டவை என்பதும் தெரியவந்தது.

மேலும் படிக்க: சென்னையில் 2- ஆவது நாளாக ரவுடிகள் வேட்டை.. 147 பேர் அதிரடி கைது.. காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை!

அகல் விளக்கு பதிப்பகத்தில் இருந்து கொள்முதல்

இந்த நூல்களை நூலக ஊழியர்கள் அகற்றி உள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் மாதம் ரூ. 27 லட்சம் மதிப்பில் அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற பதிப்பகங்களை விட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு பணம் மிக வேகமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போலி நூல்களில்

  • நிவேதா அன்பழகன்.
  • மனிஷா சரவணன்.
  • நிவேதா சுப்பையா.
  • மனிஷா அர்ஜுன்.
  • மனிஷா ஆகாஷ் ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

அனைத்து நூலகங்களிலும் நூல்கள் குறித்து சோதனை

இந்த விவகாரம் தென்காசி நூலக வாசகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்பட பல்வேறு நூலகங்களில் போலி நூல்கள் இருப்பதாகத தவெக அமைச்சர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதன் காரணமாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இதில், புத்தகங்களின் விலை, புத்தகங்களின் பதிப்பகம், நூல்களின் ஆசிரியர்கள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரூ.400 கோடி லஞ்ச புகார்.. ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய நபர்.. வழக்கில் அடுத்த பரபரப்பு!

Follow Us