சென்னை மக்கள் கவனத்துக்கு… 5 நாளுக்கு ஆதம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!
Adambakkam Traffic Diversions : சென்னை ஆதம்பாக்கத்தில் கழிவு நீர் குழாய் சீரமைக்கும் பணிகள் காரணமாக இன்று முதல் 5 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல் துறை தரப்பில் இருந் து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது .
சென்னை மாவட்டத்தில் கழிவுநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதன் காரணமாக ஆதம்பாக்கம் பகுதிகளில் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் தெற்கு மாவட்ட எல்லைக்கு உள்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் கழிவு நீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், மஸ்தான் கோரி சாலை, டாக்டர் அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே உள்ள ஆர். சி. சி. கழிவுநீர் பிரதான குழாய் சேதமடைந்துள்ளது.
ஆதம்பாக்கத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
இதனை சீரமைக்கும் பணிகள் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக சாலையின் பகுதியில் தோண்டப்பட்டு புதிய கழிவுநீர் குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிப்பதற்கு வாகனங்கள் சீராக செல்லும் வகையில் இன்று புதன்கிழமை ( நவம்பர் 11- ஆம் தேதி) முதல் நவம்பர் 15- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) 5 நாட்களுக்கு ஆதம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: குடும்பத் தகராறில் எல்லை மீறிய வெறி.. உறவினர் விரலை கடித்து துப்பிய நபர்.. அம்பாசமுத்திரத்தில் அதிர்ச்சி சம்பவம்!




அரசு பேருந்து உள்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை
இதில், ஆதம்பாக்கம் கக்கன் நகர் பிரதான சாலையில் இருந்து ஆபீசர்ஸ் காலனி பிரதான சாலை, மஸ்தான் கோரி சாலை சந்திப்பு வழியாக பரங்கிமலை ரயில் நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் ( அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும்) செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கக்கன் நகர் பிரதான சாலை, ஏரிக்கரை சாலை, பிருந்தாவன் நகர் பிரதான சாலை, பாலாஜி நகர் பிரதான சாலை மற்றும் எம். ஆர். டி. எஸ். சாலை வழியாக இடது புறம் திரும்பி செல்ல வேண்டும்.
எந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம்
இதே போல, பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து என். ஜி. ஓ. காலனி செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் பிரதான சாலை வழியாகவும். எம். ஆர். டி. எஸ். சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, எம். ஆர். டி. எஸ். சாலை, பாலாஜி நகர் பிரதான சாலை, பிருந்தாவன் நகர் பிரதான சாலை, ஏரிக்கரை சாலை, கக்கன் நகர் பிரதான சாலை வழியாக வாகனங்களும் சென்று பயணிக்கும் படத்துக்கு செல்லலாம் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தேனியில் தேசத்துரோக செயல்? அரசுப் பள்ளி கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்!