AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பத்தூரில் இரவில் திடீர் அலறல் சத்தம்.. சிறுமி அருகில் படுத்து இளைஞர் பாலியல் தொல்லை.. போக்சோவில் அதிரடி கைது!

Tirupattur Girl Harassing Man Arrested : திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் இரவில் திடீர் அலறல் சத்தம்.. சிறுமி அருகில் படுத்து இளைஞர் பாலியல் தொல்லை.. போக்சோவில் அதிரடி கைது!
கைதான ஜூலியன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Nov 2026 21:51 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர், நேற்று திங்கட்கிழமை ( நவம்பர் 9- ஆம் தேதி) தனது வீட்டின் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர் சிறுமியின் அருகில் படித்ததுடன் அவருக்கு ரீதியாக தொல்லை கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். உடனே, அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் திரண்டு வருவதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வீட்டின் வெளியே தூங்கிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது கனமந்தூர் பகுதியில் வசித்து வரும் பவுல்ராஜ் என்பவரின் மகன் ஜூலியன் ( 23 வயது) என்பது தெரியவந்தது. அவரை மகளிர் போலீசார் கைது செய்து நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், மதுபோதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க: குடும்பத் தகராறில் எல்லை மீறிய வெறி.. உறவினர் விரலை கடித்து துப்பிய நபர்.. அம்பாசமுத்திரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

போக்சோவில் கைது- சிறையில் அடைப்பு

அதன் அடிப்படையில், இளைஞர் ஜூலியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. திமுக அதிமுக இருபெறும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அரசியலை முன்னெடுத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை குறிப்பிட்டு முதல்வர் விஜய் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

தற்போது, தவெக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இருப்பினும், தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான், திருப்பத்தூரில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தேனியில் தேசத்துரோக செயல்? அரசுப் பள்ளி கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்!

Follow Us