Part Time முதல்வர்.. Full Time கண்டன்ட் கிரியேட்டர்.. ஜோசப் விஜய்க்கு பொறுப்பே இல்லை.. ரவுண்டு கட்டி விளாசிய மு.க.ஸ்டாலின்!
M.K. Stalin Criticism TVK MLAs : தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் அத்துமீறல், சட்டம்- ஒழுங்கு சீரழிவு குறித்து தமிழக அரசையும், முதல்வர் விஜயையும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் தீபாவளி தினத்தில் பல்வேறு இடங்களில் 13 படுகொலைகள் நிகழ்ந்திருந்தன. இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தனர். இவற்றையெல்லாம் குறிப்பிட்டு திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு ஐ. சி. யு. வில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் கோமாவில் உள்ளது. ஒரே நாளில் 17 படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சட்டப்பேரவை துணை தலைவர் பதவியின் மாண்பு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பார்ட் டைம் முதல்வர் – புல் டைம் கண்டன்ட் கிரியேட்டர்
முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்கு பயமில்லாத நிலை உருவாகியுள்ளது. காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர். மொத்தத்தில் பார்ட் டைம் முதல்- அமைச்சராகவும், ஃபுல் டைம் கண்டன்ட் கிரியேட்டர் ஆகவும் இருக்கும் ஜோசப் விஜய் அவர்களுக்கு பொறுப்பே இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.




தீபாவளி நாளில் எஸ்.எஸ்.ஐ. உள்பட 15 பேர் கொலை
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் பல்வேறு இடங்களி ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 15 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தேனி மாவட்டத்தில் நடு ரோட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த இளைஞர்களை மஃப்டியில் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆபாச மெசெஜ் புகாரில் சிக்கிய தவெக எம்எல்ஏ
இது ஒருபுறம் இருக்க தமிழக வெற்றுக் கழகத்தின் துறையூர் எம்எல்ஏ வும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தன்னிடம் மனு அளிக்க வந்த ஒருவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் பிடித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் பத்மஜாவுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாகவும் புகார் எழுந்தது. இவ்வாறாக தமிழகத்தில் அடுத்தடுத்து சட்டம்- ஒழுங்கும் பிரச்சனையை குறிப்பிட்டு மு. க. ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து இழுத்த இளைஞர்.. கடலூரில் பெரும் பரபரப்பு.. 3 பேர் அதிரடி கைது!