நான் ராம் சரண் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் ரிஷிகாந்த் விளக்கம்
Actor Rishikanth | தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரிஷிகாந்த். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரிஷிகாந்த் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் ரிஷிகாந்த் (Actor Rishikanth) தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தார். மேலும் நடிகர் ரிஷிகாந்த் தற்போது தொடர்ந்து படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் முன்னதாக சின்ன சின்ன வேடங்களில் நடித்த போது இவரது நடிப்பைப் பாராட்டிய மக்கள் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தபடி இந்த 2026-ம் ஆண்டில் முன்னதாக நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படம் மொத ராத்திரி. இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியான படம் டோரதி.
முன்னதாக வெளியான மொத ராத்திரி படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் இந்தப் படத்தில் நடிகர் ரிஷிகாந்த் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திலும் நடிகர் ரிஷிகாந்தின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டித்தள்ளியது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




நான் ராம் சரண் படத்தில் நடிக்கிறேனா?
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரிஷிகாந்த் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் நடிகர் ரிஷிகாந்த் பேசியதாவது, நான் RC 17 திரைப்படத்தின் ஒரு பகுதியாக இல்லை. மொத ராத்திரி திரைப்படத்தில் மைத்ரி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து பணியாற்றியிருந்ததால், அவர்கள் என்னை அழைத்ததன் பேரில் RC 17 படத்தின் பூஜையில் கலந்துகொண்டேன். படம் வெளியான பிறகு, நான் அதில் இல்லை என்பதைப் பார்வையாளர்கள் கண்டறிவதை விட, நானே அதைத் தெளிவுபடுத்த விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Suriya: மிகவும் வேடிக்கை… சூர்யாவின் சீன் படத்தை பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
I am not part of #RC17. I attended the movie pooja because I had worked on #MoothaRathiri with Mythri Productions, and they invited me. Rather than letting people watch the film and later realise I am not part of it, I wanted to clarify it myself.
– #Rishikanth https://t.co/SFSUYzDSCr— Movies Singapore (@MoviesSingapore) November 9, 2026
Also Read… தலைவர் வேற பாஸ் வேற.. முனியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜேசன் – ப்ரோமோ இதோ!