ஓடிடியில் வெளியாகி உள்ள டோரதி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Dorothy Movie OTT Review Here | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டோரதி படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthikc Subbaraj). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களை இயக்கி வரும் இயக்குநர் கர்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 10-வதாக தமிழ் சினிமாவில் வெளியான படம் டோரதி. கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரும் கதையின் நாயகன்களாக நடித்து இருந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
டோரதி படத்தின் கதை என்ன தெரியுமா?
கார்த்தி மற்றும் சுப்பு ஆகிய சிறுவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் போது இருந்தே நண்பர்கள். கார்த்திக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான். சுப்புவின் குடும்பத்தில் அம்மா மற்றும் அக்கா இருவருமே இறந்த நிலையில் அவன் வீட்டில் இரண்டு அண்ணன்கள் மற்றும் அப்பா மட்டுமே. அவர்கள் அந்த ஊரிலேயே பெரிய ரவுடிகளாக இருப்பார்கள். சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் கார்த்தி மற்றும் சுப்பு இருவரும் வளர்ந்த பிறகும் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள்.




இதில் சுப்புவின் இரண்டாவது அண்ணன் கேரளாவிற்கு பதுங்க சென்ற இடத்தில் டோரதி என்ற பெண்ணை திருமணம் செய்து வருகிறார். அவர் சுப்புவிடம் பாசமாக பழகுவது சுப்புவின் அப்பாவிற்கு தவறாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களிலேயே டோரதி கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்குகிறார்.
Also Read… பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் சோதனை… முதல்வர் பதிலளிக்க கோரிக்கை!
இந்த செய்தி அறிந்த சுப்பு அங்கு சென்று அழுகிறார். அதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தினரிடம் தான் ஒரு திருநங்கை என்பதை தெரியப்படுத்த அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இறுதியில் சுப்பிவிற்கு என்ன ஆனது கார்த்தி அவனை காப்பாற்றினான இல்லையா என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்