அரசு பேருந்துகளில் லைவ் டிராக்கிங்க் சிஸ்டம்.. பயணிகள் பாதுகாப்புக்கு அவசர உதவி பொத்தான்.. ரூ.17.99 கோடி ஒதுக்கீடு!
Govt Buses Live Tracking Systems : அரசுப் பேருந்துகளில் லைவ் டிராக்கிங்க் சிஸ்டம் மற்றும் அவசரகால உதவி பொத்தான் ஆகியவற்றை பொருத்துவதற்காக ரூ. 17 கோடியை 99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்பட்டு வரும் அனைத்து அரசு பேருந்துகளிலும் வாகன இருப்பிட கண்காணிப்பு கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்களை பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையிலும், பேருந்துகளின் இயக்கத்தை நேரத்தில் கண்காணிக்கும் வகையிலும் ரூ. 17.99 கோடி மதிப்பீட்டில் வாகன இருப்பிட கண்காணிப்பு கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்களை பொருத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்திருந்தார்.
8 போக்குவரத்துக் கழக பேருந்துகளில் லைவ் டிராக்கிங் சிஸ்டம்
அதன்படி, 8 போக்குவரத்து கழகங்களின் 13,490 வாகனங்களில் இருப்பிட கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. அத்துடன் 13, 776 அவசர உதவி பொத்தான் தொகுப்புகளும் பொருத்துவதற்கு ஏதுவாக போக்குவரத்து கழகங்களுக்கு ரூ. 17 கோடியை 99 லட்சத்தை விடுவிக்க முதல் அமைச்சர் ஜோசப் விஜய் ஒப்புதல் வழங்கி உள்ளார். ஏ. ஐ. எஸ் 140 தர இந்தக் கருவிகள் மைய கண்காணிப்பு அமைப்புடன் இணைக்கப்பட உள்ளது. மூலம் அரசு பேருந்து இருப்பிடம், அவை இயக்கப்படும் மேகம், நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் படுகிறதா மற்றும் எச்சரிக்கைகள் தவற்றை நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்.
மேலும் படிக்க: தட்டித் தூக்கிய சிவகாசி.. தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை.. வாய்யை பிளக்க வைத்த விருதுநகர்!
அரசு பேருந்துகளில் அவசரகால உதவி பொத்தான்
இதன் காரணமாக பேருந்துகள் இயக்க மேற்பார்வை மேம்படும். அத்துடன், தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வழிவகுக்கும். அரசு பேருந்து பயணத்தின் போது, பயணிகளுக்கு அவசர உதவி ஏதேனும் தேவைப்படும் பட்சத்தில் அவசர உதவி பொத்தானை அழுத்துவது மூலம் கட்டுப்பாட்டு மையத்துக்கு உதவி கோர இயலும். அதன் அடிப்படையில் வாகன இருப்பிடத்தை உடனடியாக அறிந்து காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து விரைவான உதவி வழங்க இந்த அமைப்பு பெரும் உதவியாக இருக்கும். மேலும், பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு அவசரகால உதவி உறுதி செய்யப்படும்.
பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு
அத்துடன், பேருந்து இயக்க கண்காணிப்பை ஒருங்கிணைக்கும் இந்த திட்டத்தின் மூலமாக, மகளிர்கள் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வழிவகுக்கும். இத்தகைய திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழக அரசு பேருந்துகள் நவீனமாக மாறுகிறது.
மேலும் படிக்க: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. நகரில் வலம் வரும் 1000 ஏ.சி. பேருந்துகள்.. ரூ. 500 கோடி ஒதுக்கீடு!