தீபாவளி மது விற்பனை.. 2 நாட்களில் எத்தனை கோடி வருமானம் தெரியுமா? லிஸ்ட்டில் முதலில் இருக்கும் திருச்சி!
Diwali Liquor Sales Amount : தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 2 நாள்களில் ரூ. 441.38 கோடிக்கு மது விற்பனை நிகழ்ந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மண்டலம் வாரியாக எத்தனை கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளையொட்டி, டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற சிறப்பு மது விற்பனையில் 2 நாட்களில் மட்டும் மொத்தம் ரூ. 441.38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை ஒட்டி மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,040 அரசு டாஸ்மாக் விற்பனை கடைகளில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மது விற்பனை நடைபெற்றது. இதில், தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) ரூ. 234.75 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளன்று ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 8- ஆம் தேதி) ரூ.206.63 கோடிக்கும் என மொத்தம் ரூ. 441.38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மண்டலங்கள் வாரியாக மது விற்பனை வருமானம்
இதில், தமிழகத்தில் 5 மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் அதிக மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில்,
மேலும் படிக்க: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. நகரில் வலம் வரும் 1000 ஏ.சி. பேருந்துகள்.. ரூ. 500 கோடி ஒதுக்கீடு!
- திருச்சி மண்டலம் – ரூ.98.97 கோடி.
- சென்னை மண்டலம்- ரூ.95.85 கோடி.
- மதுரை மண்டலம் ரூ. 88.38 கோடி.
- சேலம் மண்டலம் ரூ. 87.52 கோடி.
- கோயம்புத்தூர் மண்டலம்- ரூ.70.66 கோடி.
ரூ. 633.38 கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு
என மொத்தம் ரூ. 441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. தீபாவளிக்கு மறுநாளான இன்று திங்கள்கிழமை ( நவம்பர் 9- ஆம் தேதி) அரசு விடுமுறை என்ற காரணத்தால் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் விற்பனை உடன் சேர்த்தும் மொத்தம் சுமார் ரூ.633.38 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஆண்டும் தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிக அளவு நடைபெறும். அதன்படி, நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் மது விற்பனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது.
வெளிமாநிலங்களில் இருந்து புதிய மதுபானங்கள்
இதற்காக, வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 20 மதுபானங்கள் மற்றும் 4 புதிய பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது. அத்துடன், தீபாவளி விற்பனை நேரத்தில் மது பிரியர்கள் கேட்கும் மது பிராண்டுகள் இல்லை என்றும், அதேவேளையில் அனைத்து வகை மதுபானங்களையும் இருப்பு வைக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, 2 நாட்களில் நடைபெற்ற மது விற்பனைகள் ரூ. 441.38 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: அரசு பேருந்துகளில் லைவ் டிராக்கிங்க் சிஸ்டம்.. பயணிகள் பாதுகாப்புக்கு அவசர உதவி பொத்தான்.. ரூ.17.99 கோடி ஒதுக்கீடு!