AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நிறுவனத்தின் பெயரில் மோசடி.. அதிரடி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்!

RKFI Production Fraud Alert : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்துவருவது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளராக கமல்ஹாசன் இருந்துவருகிறார். அந்த விதத்தில் இந்நிறுவனத்தின் பெயரில் நடக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை பதிவை படக்குழு பகிர்ந்துள்ளது.

நிறுவனத்தின் பெயரில் மோசடி.. அதிரடி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்!
ஆர்கேஎஃப்ஐ மோசடி எச்சரிக்கைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Nov 2026 20:30 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்நது பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் இறுதியாக தமிழில் நடித்த திரைப்படம் தக் லைஃப். இதை இயக்குநர் மணி ரத்தினம் (Director Mani Ratnam) இயக்க, கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் (Raajkamal Films International Production) கீழ் தயாரித்திருந்தார். தற்போது இந்த நிறுவனத்தின் கீழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் தற்போது இந்த படக்குழு அதிரடியான எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பெயரில் வாய்ப்பு வாங்கித்தருவதாக நடக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் பெயரில் மோசடிசெய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: ஜூனியர் பிக் பாஸாக வினோத்.. அவரின் இடத்தை மாற்ற துடிக்கும் சாதிகா – லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!

மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்:

அந்த பதிவில், இந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படும் படங்களுக்காக எந்த காஸ்டிங் ஏஜெண்டுகளையும் அவர்கள் நியமிக்கவில்லையாம். இந்நிறுவனத்தின் கீழ் தறிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக வாய்ப்புகள் வந்தாலும் நம்பவேண்டாம். எங்கள் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

பெயர் மோசடி குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கமல்ஹாசனின் இந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தற்போது கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் நடிக்கும் தர்மன் திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் மற்றும் கமல்ஹாசன் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் நடித்துவரும் சண்டியர் என மொத்தம் மொன்று பிரம்மாண்டமான படங்கள் இந்த நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மிகவும் வேடிக்கை… சூர்யாவின் சீன் படத்தை பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு!

இந்த நிறுவனத்தின் கீழ் கிட்டத்தட்ட ரூ 300 முதல் 400 கோடி மதிப்பிலான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இந்த நிறுவனத்தின் கீழ் உருவாகும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வாங்கி தருவதாக பல மோசடிகளும் நடக்கிறதாம். இதை எச்சரிக்கும் வகையில் படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Follow Us