Dhruv Vikram: தொடங்கியது துருவ் விக்ரமின் ஜாக்கி படத்தின் ஷூட்டிங் – வெளியான போட்டோஸ்!
Jackie Movie Shooting: தமிழில் இளம் நாயகனாக மக்கள் மத்தியில் பேமசானவராக இருந்துவருபவர் துருவ் விக்ரம். இவரின் நடிப்பிலும், இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்திலும் உருவாகிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இன்று (09/11/2026) முழுவதுமாக தொடங்கியுள்ளதாம். இது குறித்த புகைப்படங்களை துருவ் விக்ரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் ஆதித்ய வர்மா (Adithya Varma) என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவர் நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பைசன் (Bison). இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பிறகு துருவ் புதிய படத்திற்கான கதைகளை கேட்டுவருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆதித்ய வர்மா படத்தில் உதவி இயக்குநராக இருந்த கரண் அரவிந்த் குமார் (Karan Aravind Kumar) இயக்கத்தில் தற்போது ஜாக்கி (Jackie Movie) என்ற புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரம் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இன்று (09/11/2026) சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. அந்த விதத்தில் அது தொடர்பான பதிவை நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: தனது அடுத்தப் படத்தின் ஊதியத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ள நடிகர் விஷால்? வைரலாகும் தகவல்
ஜாக்கி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவை துருவ் விக்ரம்:
View this post on Instagram
இந்த பதிவில் ஜாக்கி படத்தின் ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து, அதில் “ஜாக்கி ஆன் டியூட்டி” என எழுதியுள்ளார். இந்த புகைப்பட பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஜாக்கி திரைப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடி யார்:
இந்த ஜாக்கி படத்தை இயக்குனர் கரண் அரவிந்த் குமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாய் அயங்கர் இசையமைப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், பின் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகக் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படமானது அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறதாம். இந்த படத்தில் துருவ விக்ரம் ஜக்கி என்ற ஸ்டண்ட் மற்றும் பயமில்லாத ஆணாக நடித்துவருகிறார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளதாம்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள டோரதி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கவுள்ளார் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சில ருக்மிணி வசந்த் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். மேலும் சில தகவலின்படி பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகவுள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்ற நிலையில், விரைவில் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.