AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhruv Vikram: நான் எப்போதுமே அவரின் ரசிகன்.. அவர் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளார் – முதல்வர் விஜய் குறித்து துருவ் விக்ரம்!

Dhruv Vikram Hails CM Vijay; தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், இளம் ரசிகர்களை கவர்ந்துவருபவர் துருவ் விக்ரம். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்துகொண்ட நிலையில், அதில் முதல்வர் விஜய்யும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய துருவ் விக்ரம், முதல்வர் விஜய்யின் பணிகள் அவரின் உத்வேகங்கள் குறித்து பேசியுள்ளார்.

Dhruv Vikram: நான் எப்போதுமே அவரின் ரசிகன்.. அவர் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளார் – முதல்வர் விஜய் குறித்து துருவ் விக்ரம்!
முதல்வர் விஜய் மற்றும் துருவ் விக்ரம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Aug 2026 16:06 PM IST

நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மகனாக இருந்து, தற்போது சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இளம் நடிகராக மாறியிருப்பவர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் இதுவரை குறைவான திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவரின் நடிப்பில் இறுதியாக பைசன் (Bison) என்ற படம் வெளியானது. இதை இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி மற்றும் ராஜீஷா விஜயன் போன்ற நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதன் பிறகு, தற்போது அரிகமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் (Karan Aravindh Kumar) இயக்கத்தில் DV04 என்ற படத்தில் நடித்துவருகிறார்.

மேலும் சமீபத்தில் இவர், முதல்வர் விஜய் (CM Vijay) கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது பேசிய துருவ் விக்ரம், முதலமைச்சர் விஜயை பாராட்டி பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: மிகச் சிறந்த திரைப்படம்… லோகேஷ் கனகராஜின் டிசி படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு

முதலமைச்சர் விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் துருவ் விக்ரம்:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய துருவ் விக்ரம், “ஆம், நான் எப்போதுமே அவருடைய ரசிகன். அவர் உண்மையாக நிஜத்தில் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவராகவும், புரட்சியாளராகவும் திகழ்கிறார். அவருடைய வாழ்க்கையின், இந்த அடுத்த அத்தியாயத்தில் அவர் மேற்கொள்ளும் பயணம் மற்றும் உறுதியான நம்பிக்கைக்கு நான் மிகுந்த மரியாதை அளிக்கிறேன்.

இதையும் படிங்க: அந்த தெலுங்கு நடிகராக நடிக்க ரொம்ப ஆசை – பிரியா பவானி ஷங்கர் பேச்சு!

அவர் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளார், நான் அவர்களில் ஒருவன் மட்டுமே. எனவே, நான் அவருக்கு என் சல்யூட் ஐ தெரிவிக்கிறேன்” என அதில் அவர் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை சந்தித்து கட்டியணைத்திருந்தார் துருவ் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் துருவ் விக்ரமின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Dhruv (@dhruv.vikram)

நடிகர் துருவ் விக்ரம், தற்போது அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் இயக்கத்தில், தனது 4வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதையில் உருவாக்கப்பட்டுவருகிறதாம். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் ஏற்கனவே தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us