சூர்யாவுடன் விரைவில் படம்.. வெளிப்படையாக சொன்ன இயக்குநர் திரிவிக்ரம்!
Director Trivikram On Suriya: டோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் திரிவிக்ரம். இவர் தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு முதல் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட வெற்றி விழாவில் கலந்துகொண்ட இவர், சூர்யாவுடன் திரைப்படத்தில் இணைய விரும்புவதாக கூறியிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் திரிவிக்ரம் (Trivikram). இவர் தெலுங்கு சினிமாவில் நுவே நுவே (Nuvve Nuvve) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர். கடந்த 2002ம் ஆண்டில் இயக்குநராக நுழைந்த இவர், தற்போது வரையிலும் படங்களில் இயக்குநராக பணியாற்றிவருகிறார். இவர் நடிகர்கள் மகேஷ் பாபு (Mahesn Babu), ஜூனியர் என்டிஆர் (Jr NTR) மற்றும் அல்லு அர்ஜுன் (Allu Arjun) உள்ளிட்ட பல்வேறு தெலுங்கு பிரபலன்களுடனும் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் இயக்கத்தில் சினிமாவில் இறுதியாக வெளியான படம் குண்டூர் காரம் (Guntur Kaaram). 2024ம் ஆண்டில் மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீலீலாவின் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு பின் AK47 என்ற வபடத்தில், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீநிதி செட்டியுடன் புது படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்றிருந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) பட தெலுங்கு வெற்றி விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் திரிவிக்ரம் அதில், சூர்யாவுடன் படத்தில் இணையவிருந்தது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: குடும்பங்கள் கொண்டாடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சூர்யாவுடன் திரைப்படத்தில் இணைவது குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் திரிவிக்ரம்:
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட வெற்றி விழாவில் பேசிய திரிவிக்ரம், “நான் சூர்யா சாருடன் ஒரு படம் செய்யவிருந்தேன், ஆனால் அவருக்குப் பிடித்தமான ஒரு கதையை நான் இன்னும் அவரிடம் சொல்லவில்லை. நான் விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். ஏனென்றால், அவருடன் ஒரு படம் செய்ய வேண்டும் என்பது ஒரு வேண்டுகோள் அல்ல, அது என் மனைவியின் கட்டளை. என் மனைவி அவருடைய தீவிர ரசிகை. அவர் பொதுவாக எந்த படப்பிடிப்புக்கும் செல்வதில்லை.
இதையும் படிங்க: தனுஷ் சாருடனான படம் எனது ட்ரீம்.. ஸ்டார் பட இயக்குநர் ஓபன் டாக்!
ஆனால் குறிப்பாக இந்த படப்பிடிப்புக்கு வந்து அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அடிப்படையில், பெண்களுக்கு ஒருவரை எளிதில் பிடித்துவிடாது. ஆனால் ஒருமுறை பிடித்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அதை விடமாட்டார்கள். அப்படிப்பட்ட கதாநாயகர்கள் மிகவும் அரிது.. சூர்யா அவர்களில் ஒருவர். வயது பின்னோக்கிச் செல்லும் இரண்டு கதாநாயகர்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் சூர்யா, மற்றொருவர் மகேஷ் பாபு” என அதில் அவர் கூறியிருந்தார்.
சூர்யாவுடன் படத்தில் பணியாற்றுவது பற்றி இயக்குநர் திரிவிக்ரம் பேசியது தொடர்பான எக்ஸ் வீடியோ பதிவு:
#Trivikram: I was supposed to do a film with Suriya garu, but I haven’t told him a story that he liked yet..😄#Suriya: Sir.. Sir…😄#Trivikram: I believe I’ll work with him soon.. Because it’s not a request, it’s a demand from my wife to do a film with him..😃 She’s a big…
— Laxmi Kanth (@iammoviebuff007) August 15, 2026
இயக்குநர் திரிவிக்ரம் சூர்யாவை வைத்து புது படம் இயக்குவதாக முன்பே பேசப்பட்டது. அதை இயக்குநர் திரிவிக்ரம் உறுதி செய்துள்ளார். இந்த படம் எப்போது நடைபெறும் என்பது ரசிகர்களாகி அனைவரும் பொறுத்திருந்து பார்க்கலாம்.