AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: தனுஷ் சாருடனான படம் எனது ட்ரீம்.. ஸ்டார் பட இயக்குநர் ஓபன் டாக்!

Director Elan on Dhanush Movie: தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்துவருபவர் எலன். இவர் 2018ம் வெளியான பியர் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் இயக்குனராக நுழைந்தார். தற்போது பியர் பிரேமா கல்யாணம் என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

Dhanush: தனுஷ் சாருடனான படம் எனது ட்ரீம்.. ஸ்டார் பட இயக்குநர் ஓபன் டாக்!
எலன் மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Aug 2026 17:13 PM IST

கோலிவுட் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) மற்றும் ரைசா வில்சனின் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான திரைப்படம் பியர் பிரேமா காதல் (Pyaar Prema Kaadhal). இந்த படமானது காதல் மற்றும் ரோமெண்டிக் கதைக்களத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை இயக்குநர் எலன் (Elan) இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், மேலும் பின் படங்களை இயக்க தொடங்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் 2வது திரைப்படமாக வெளியாகியிருந்தது ஸ்டார் (Star). கவின், பிரீத்தி முகுந்தன் இந்த படத்தில் நடித்திருந்த நிலையில், 2024ம் ஆண்டில் வெளியானது. இந்த படமும் இவருக்கு வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் நடிகராக எலன் அறிமுகமாகியுள்ளார்.

இவர் நடிகராக நடித்துள்ள புது படம்தான் பியர் பிரேமா கல்யாணம் (Pyaar Prema Kalyaanam). இதில் எலன் நடிகராக நடிக்க சான்வே மேக்நா நடித்துள்ளார். இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் எலன், தனுஷுடன் (Dhanush) படத்தில் இணைவது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஸாம்பி கதையில்… பிரபு தேவா மற்றும் வடிவேலுவின் ‘பேங் பேங்’ படத்தின் டீசர் இணையத்தில் வைரல்!

தனுஷுடன் புதிய திரைப்படத்தில் இணைவது குறித்து பேசிய இயக்குநர் எலன்:

அந்த பேட்டியில் பேசியிருந்த இயக்குநர் எலன், “தனுஷ் சாருடன் இணையும் படம் இன்னும் இருக்கிறது. நான் தனுஷ் சாருடன் ஒரு படம் செய்ய விரும்புகிறேன், அது எனது கனவுத் திட்டம். அந்தப் படம் நிச்சயம் நடக்கும். தனுஷ் சாருக்கு தற்போது பல வேலைகள் உள்ளன, அவற்றை அவர் முடித்தவுடன் நாங்கள் கைகோர்ப்போம். இது தனுஷ் சாருக்கு மிகவும் பிடித்த ஒரு கதை” என அந்த நேர்காணலில் பேசியிருந்தார். நடிகர் தனுஷ் ஏற்கனவே கிட்டத்தட்ட 8-க்கும் மேற்பட்ட படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். அதில் ஒரு படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குடும்பங்கள் கொண்டாடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தனுஷுடன் புதிய படத்தில் இணைவது குறித்து எலன் பேசிய வீடியோ பதிவு:

இயக்குனர் எலன் தற்போது ஹீரோவாக பியர் பிரேமா கல்யாணம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது காதல், ஆக்ஷன் மற்றும் பேமிலி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்படமானது நிச்சயம் ஓடிடியில் வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது.

Follow Us