தன்யாவின் இந்தவார கேப்டன்சி.. டிடிஃஎப் வாசனுக்கு ஆதரவா? – கேள்விகளால் அடுக்கிய போட்டியாளர்கள்!
Bigg Boss 10 Tamil Dhanya Captaincy: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 11வது வாரத்தை கடந்துள்ளது. வார இறுதியான இன்று (22/11/2026) வவிஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்த நிலையில், இந்த வாரத்தில் தன்யாவின் கேப்டன்சி குறித்து சக போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் (22/11/2026) 77 நாட்களாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்றிருந்த நிலையில், இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளதாம். அந்த விதத்தில் சாதிகா மற்றும் முகேஷ் இருவருமே வெளியேற்றப்பட்டுள்ளார்களாம். அதனால் இப்போது இந்தநிகழ்ச்சியில் வெறும் 08 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். கடந்த வாரத்தில் இந்த பிக் பாஸ் வீட்டில் தன்யா (Dhanya) கேப்டனாக இருந்த நிலையில், பல பிரச்சனைகளுக்கு சிறப்பாக தீர்வை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அவரின் கேப்டன்சி குறித்து சக போட்டியாளர்களிடையே கேள்வி கேட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்கு போட்டியாளர்கள் சொன்ன கருத்து தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அன்புக்கு ரொம்ப நன்றி.. சர்ப்ரைஸாக தியேட்டர்களை விசிட் செய்த சாய் பல்லவி!
இந்த வாரத்தில் தன்யாவின் கேப்டன்சி எப்படி இருந்தது என கேட்ட விஜய் சேதுபதி:
இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, சக போட்டியாளர்களிடையே, ” இந்த வாரத்தில் தன்யாவுடைய கேப்டன்சி எப்படி இருந்தது?” என கேள்வி கேட்டார். முதலில் எழுந்த அன்சர், “பனிஷ்மென்ட் கொடுத்தாங்க.. ஆனால் அதில் ஃபேவரடிசம் பார்த்த மாதிரி இருந்தது. தனக்கு பிடித்த நபருக்கும் மட்டும் பெரிதாக பனிஷ்மென்ட் கொடுக்காத மாதிரி இருந்தது” என கூறினார். மேலும் முகேஷ், “அவர் ஒரு பிரச்சனையை தீர்க்கிறேன் என நுழைந்து, அதை ஒரு மாதிரி நல்ல இல்லை சார்” என கூறினார். அதன் பிறகு பிருத்வி எழுந்த நிலையில், “நிறைய இடத்தில் அவர் வாசனிடம் பார்ஷயலாக இருந்ததுபோல இருந்தது சார்” என கூறினார்.
இதையும் படிங்க: பிக்பாஸில் வாரம் முழுவதும் அநாகரீகமாக நடந்துகொண்ட ஜேசன்… அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் விஜய் சேதுபதி – வைரலாகும் புரோமோ வீடியோ
அதன் பிறகு விஜய் சேதுபதி பேசிய நிலையில், “கேப்டனாக நீங்கள் பனிஷ்மென்ட் கொடுத்திருக்கணுமா? இல்லையா?. ஜேசனுக்கு கொடுத்தீங்கலா? வாசனுக்கு ஏன் கொடுக்கவில்லை” என கேட்டிருந்தார். இதற்கு தன்யா தனது முகத்தை பாவமாக வைத்திருந்தபடி இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 77வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day77 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/iZwBQUsdeN
— Vijay Television (@vijaytelevision) November 22, 2026
இந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. கடந்த வாரத்தில் அவினாஷ் மற்றும் முத்தழகி என இருவருமே வெளியேற்றப்பட்டிருந்தனர். அதனை அடுத்ததாக இந்த வாரத்தில் சாதிகா மற்றும் முகேஷ் என இருவருமே வெளியேற்றப்பட்டுள்ளாராம்.