அன்புக்கு ரொம்ப நன்றி.. சர்ப்ரைஸாக தியேட்டர்களை விசிட் செய்த சாய் பல்லவி!
Sai Pallavi Theater Visit: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் நடிகையாக, ஒரு கதாநாயகன் அளவுக்கு வரவேற்பை பெற்றுவருபவர் சாய் பல்லவி. இவர் தனுஷின் ஓ.எம் திரைப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு அவர் சர்ப்ரைஸ் விசிட் செய்தது தொடர்பான வீடியோ படக்குழு பகிர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மக்களால் அதிகமாக வரவேற்கப்பட்டுவரும் நாயகியாக இருந்துவருபவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவரை தெலுங்கு சினிமாவில் மக்கள் “லேடி பவர்ஸ்டார்” (Lady Power Star) என்றே அழைத்து வருகிறார்கள். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில் இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்த திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie) . இதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கியிருந்த நிலையில், பான் இந்திய சினிமாவில் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் ராமாயணா மற்றும் ஓ.எம் என இரு படங்கள் வெளியாகியிருந்தது. இதில் ராமாயணா திரைப்படத்தில் சீதையாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதற்கு அப்படியே ஆப்போசிட் வேடமான “நித்யா ரெட்டி” என்ற போலீஸ் அதிகாரியாக ஓ.எம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் திரையரங்குகளில் சிறப்பான வெற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் நடிகை சாய் பல்லவி, இப்படம் வெளியாகும் தியேட்டர்களில் சர்ப்ரைஸ் விசிட் செய்துவருகிறார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: இன்றைய தலைமுறையினர் அப்படி இருப்பது வருத்தமளிக்கிறது – இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஓபன் டாக்
ஓ.எம் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சர்ப்ரைஸ் விசிட் செய்த சாய் பல்லவி தொடர்பான வீடியோ:
When Nithya Reddy arrived to interact with the audiences ❤️
@Sai_Pallavi92’s theatre visit for #OM, catch the thrill in theatres now!
A @Rajkumar_KP Film
@dhanushkraja @mammukka @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 22, 2026
இந்த வீடியோவில் நடிகை சாய் பல்லவி, ஓ.எம் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் ரசிகர்களுக்கு தெரியாமேலே சர்ப்ரைஸாக சென்றுள்ளார். அங்கு திரைப்படத்தை பார்த்து முடித்த ரசிகர்களிடம் பேசியுள்ளார். மேலும் ரசிகர்கள் எதற்கு சிறப்பான பாராட்டுகளையும் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு சாய் பல்லவி தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார். மேலும் ரசிகர்களுடன் செல்பீ மற்றும் புகைப்படங்களை சாய் பல்லவி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ பதிவை படக்குழு பகிர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ட்ரெயின் படத்தில் நான் நடித்ததற்கு காரணம் இதுதான் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!
தனுஷின் ஓ.எம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்:
இந்த ஓ.எம் திரைப்படமானது தமிழ் மட்டுமல்லால், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் மலையாள ஹீரோ மம்முட்டி, நடிகை சாய் பல்லவி, நடிகர் இந்திரன்ஸ் மற்றும் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியான முதல் நாளிலே உலகமெங்கும் சுமார் ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாக படக்குழு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.