AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கதேசத்தில் பெரும் கலவரம்! அவாமி லீக் தலைவர்கள் 30 வீடுகள் தீவைத்து எரிப்பு.. பரபரப்பு பின்னணி!

Bangladesh Awami League Leaders Houses Fire: வங்கதேசத்தில் பிஎன்பி உறுப்பினர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவாமி லீக் கட்சியின் தலைவர்களின் 30 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது பெரும் வன்முறையாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

வங்கதேசத்தில் பெரும் கலவரம்! அவாமி லீக் தலைவர்கள் 30 வீடுகள் தீவைத்து எரிப்பு.. பரபரப்பு பின்னணி!
தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடுகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Nov 2026 15:18 PM IST

வங்கதேசத்தில், நாரைல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவாமி லீக் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு சொந்தமான சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சுமார் 30 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அரசியல் வன்முறை பல பகுதிகளுக்கும் பரவியதை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் படையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். காலியா உப மாவட்டத்தின் பெண்டர்சார் கிராமத்தில் கடந்த கடந்த இரு நாட்கள் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், பல வீடுகளும், கடைகளும் சேதப்படுத்தப்பட்டு சூறையாடப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறி வைக்கப்பட்ட சொத்துக்களில் முன்னாள் அவாமி லீக் எம்பி கவீரூல் ஹக் முக்தி, முன்னாள் காலியா நகராட்சி மேயர் முஷ்பீகுர் ரஹ்மான் லிட்டன் மற்றும் உள்ளூர் கட்சி பொதுச் செயலாளர் கிருஷ்ணபதா கோஷ் ஆகியோர் வீடுகளும் அடங்கும்.

அவாமி லீக் தலைவர்களின் 30 வீடுகளுக்கு தீ வைப்பு

இரவு சுமார் 8 மணி அளவில் கிராமத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் 20 முதல் 30 வீடுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதனை அனைத்துள்ளனர். ஆளும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் ஆதரவாளர்கள் சுமார் 50 வீடுகளையும், கடைகளையும் சேதப்படுத்தி சூரையாடி, தீ வைத்து கொளுத்தியதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இருப்பினும், உள்ளூர் பி.என்.பி. கட்சித் தலைவர்கள் இதனை மறுத்துள்ளனர். காலியா உபமாவட்ட நிர்வாக அதிகாரி முகமது ஜின்னதுல் இஸ்லாம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான வீடுகள் உள்பட பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டது உறுதிப்படுத்தினார்.

மேலும் படிக்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியா நிபந்தனை? மறுப்பு தெரிவித்த வங்கதேச அரசு.. நடந்தது என்ன!

வன்முறை தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது

5 முதல் 6 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், முக்தி மற்றும் கோஷ் ஆகியோரின் வீடுகள் மீதான தாக்குதல்களை அவர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் இந்த வன்முறைக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதை மாவட்ட நிர்வாகம் இன்னும் கண்டறியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த வன்முறையில் கொல்லப்பட்ட 2 பி.என்.பி. தலைவர்களின் உறவினர்களும், ஆதரவாளர்களும் பெண்டார்சாரில் கூடி, கொலைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அவாமி லீக் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு சொந்தமான இடங்களை தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வன்முறை நடந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு

வன்முறையால் ஏற்ற அசாதாரன நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தியதாக போலீசார் தெரிவித்தனர். நாரைல் எஸ்.பி. முகமது அல் மாமுன் சிக்டர் தனித்தனியாக ப்ரோதோம் அல்லோவிடம் 3 முதல் 4 வீடுகள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட தாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அக்டோபரில் 26 டன் கொள்முதல்! சீனா அதிகளவு தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பது ஏன்? இந்தியா எந்த இடத்தில் உள்ளது!

Follow Us