ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியா நிபந்தனை? மறுப்பு தெரிவித்த வங்கதேச அரசு.. நடந்தது என்ன!
Bangladesh Former PM Sheikh Hasina : இந்தியாவில் தஞ்சம் அடைந்துள் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கு இந்தியா நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுவதை வங்கதேச அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்காக இந்தியா நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுவதை வங்கதேச அரசு மறுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இது போன்ற பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று வங்கதேச அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கு இந்தியா நிபந்தனைகளை விதித்ததாக கூறும் அறிக்கையை நிராகரித்துள்ளது. தற்போது, இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் புதுடெல்லி, ஹசீனாவை ஒப்படைக்கும் என்று டாக்கா எதிர்பார்ப்பதாகவும், அவரை திரும்ப பெறுமாறு கோரி இந்தியாவுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷமா ஒபைத் இஸ்லாம் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு
ஹசீனாவை நாடு கடத்துவதற்கான நிபந்தனைகளாக அவருக்கு புதிய விசாரணை நடத்தவும், அவரது மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கவும் இந்தியா வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கு, அப்படியெல்லாம் இல்லை. இந்த விஷயம் தொடர்பாக நாங்கள் இந்தியாவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் என்று இஸ்லாம் தனது அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஹசீனாவின் திரும்புதலை உறுதி செய்வதற்கான அனைத்து சட்டபூர்வ நடைமுறைகளையும் டாக்கா முடித்து விட்டதாகவும், முடிவெடுக்கும் பொறுப்பு புதுடெல்லி இடம் விடப்பட்டுள்ளதாக வங்கதேச சட்ட அமைச்சர் முகமது அசாத்துசமான் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற லலித் மோடி.. நெகிழ்ச்சி பதிவுடன் போட்டோ வெளியீடு!
வங்கதேச உச்சநீதிமன்றத்தில் எந்த விதியுமில்லை
சட்டப்பூர்வ நடைமுறையின் ஒரு பகுதியாக எங்கள் தரப்பில் தேவைப்பட்ட அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம். இந்தியா என்ன செய்வார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது என்று குறிப்பிட்டார். மனித குலத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில் மேல் முறையீடுகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வங்கதேச உச்சநீதிமன்றத்தில் எந்த விதியும் இல்லை என்று அசாத்துசமான் கூறியுள்ளார். அவரது அவாமி லீக் அரசை கவிழ்த்த மாணவர் தலைமையிலான கிளர்ச்சியை தொடர்ந்து 2024- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5- ஆம் தேதி ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து வங்கதேசம் அவரை நாடு கடத்த கோரி வருகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை- ஆயுள் தண்டனை
2024 ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை தொடர்பாக மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 2025 நவம்பர் மாதம் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனாவை அவர் இல்லாத நிலையில் குற்றவாளி என தீர்ப்பளித்தது. ஒரு குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு மரண தண்டனையும், மற்றொரு குற்றச்சாட்டில் ஆயுத தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டேட்டிங் செயலி காதல்.. இந்தியா தேடி வந்த 61 வயது கனடா பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!