உருவானது அக்வான் புயல்.. தமிழகத்திற்கு கனமழை வாய்ப்பு குறைகிறதா? ஆந்திரா நோக்கி நகரும் புயல்
Cyclone Akvan: புயலின் நகர்வைப் பொறுத்தே சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான மழை வாய்ப்பு அமையும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நெல்லூருக்குத் தெற்கே புயல் நகர்ந்தால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இந்தப் பாதைக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நவம்பர் 16, 2026: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ‘அக்வான்’ (Akvan) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னைக்கு எதிர்பார்க்கப்பட்ட கனமழை வாய்ப்பு குறையக்கூடும் என வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு!
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றது. நவம்பர் 16ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது.
அப்போது சென்னைக்கு கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 660 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது.
இந்தப் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 17ஆம் தேதி மாலைக்குள் தீவிரப் புயலாகவும், நவம்பர் 19ஆம் தேதி காலையில் அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டெல்லியில் பரபரப்பு.. சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பின்வாசல் வழியாகச் சென்ற முதல்வர் விஜய்!
நவம்பர் 20ல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் அக்வான்
அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் அக்வான், நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் அளவில் நெல்லூர் முதல் துனி இடையே ஆந்திரா மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு கனமழை கிடைக்குமா?
Chakkaram Akvan Update – Time to let it go !!!!
————————–
Let’s keep our expectations low, although there are still divergent model projections ranging from North Andhra/Odisha to South Andhra. However, it may be time to let this system also head towards Andhra, just like Arnab and Murasu.KTCC (Chennai) should receive normal rainfall around the 19th, even if the system tracks towards Andhra. Even Murasu-type rainfall would be a happy outcome for Chennai. However, if the system moves towards Machilipatnam or Kakinada, even this rainfall potential could disappear for Chennai.
Possible Rainfall chances for KTCC:
————————
Nellore and further south: Chennai could receive heavy rainfall, but the chances of this track are slim.Anything north of Nellore to Machilipattinam / Kakkinada: We may miss out on the heavy rainfall and receive only normal rains. This scenario currently has higher chances.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 16, 2026
இதற்கிடையே, புயலின் நகர்வைப் பொறுத்தே சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான மழை வாய்ப்பு அமையும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நெல்லூருக்குத் தெற்கே புயல் நகர்ந்தால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இந்தப் பாதைக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மாறாக, நெல்லூருக்கு வடக்கே மசூலிப்பட்டினம் அல்லது காக்கிநாடா நோக்கிப் புயல் நகர்ந்தால் சென்னைக்கு கனமழை கிடைக்காமல் சாதாரண மழை மட்டுமே பெய்யக்கூடும். தற்போது இந்தப் பாதைக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “தமிழக வெற்றிக் கழக ஆட்சி கலப்பட ஆட்சி.. சூரசம்ஹாரமே சாட்சி!” – முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்!
புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், நவம்பர் 19ஆம் தேதி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயல்பான மழை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புயலின் பாதை மற்றும் தீவிரத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே தமிழகத்திற்கான மழை நிலவரம் உறுதியாகும்.