கள்ளக்குறிச்சி ஆட்சியர்- தவெக எம்எல்ஏ விவகாரம்.. மாவட்ட பொ.அமைச்சர் வன்னி அரசு கூறிய அந்த வார்த்தை!
Minister Vanni Arasu : கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர், தவெக எம்எல்ஏ விவகாரத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் எம். எல். ஏ. அருள் விக்னேஷ் வாட்ஸ் ஆப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் வன்னிஅரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவாகரத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும். அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆணையம் விசாரணை மேற்கொண்டு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும். இதில், எந்த மாற்று கடத்தும் இல்லை. சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறது என்ற வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் தலைவர் அண்ணாமலையின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது.
ஆட்சியர்- எம்எல்ஏ விவகாரத்தில் வன்னி அரசு பதில்
ஒரு வேளை அண்ணாமலை கர்நாடக காவல்துறை தொடர்பாக பேசுகிறாரா என்பது எனக்கு தெரியவில்லை வன்னி அரசு தெரிவித்தார். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் வன்னி அரசு எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வன்னி அரசு தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் படிக்க: மதுரை தனிஷ்க் கொள்ளை.. இன்ஸ்டா மீனாட்சி தாய்க்கு தொடர்பா? விசாரணையில் அதிரடி காட்டிய போலீசார்!
பெண் ஆட்சியருக்கு எம்எல்ஏ ஆபாச மெசேஜ்
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு, தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் செல்போன் மூலமாக தொடர் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், அவரது வாட்ஸ்ஆப் எனக்கு அண்மையில் குறுஞ்செய்தி அனுப்பிய அருள் விக்னேஷ் எம்எல்ஏ, அதில் ஆபாசமான வார்த்தைகளை குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியில் கசிந்த நிலையில் பேசும் பொருளானது. அத்துடன், தவெக எம்எல்ஏ மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
தவெக எம்எல்ஏ மீது மத்திய அரசுக்கு புகார்
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் இது தொடர்பான புகாரை மத்திய அரசுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்துக்கும் அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகின. அத்துடன், தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிப்பதாகவும், இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில், ஒரு வார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் மகளிர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க: போலி நூல்கள் கொள்முதல் விவகாரம்.. வசமாக சிக்கிய அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர்.. கைது செய்த போலீசார்!