AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தமிழக வெற்றிக் கழக ஆட்சி கலப்பட ஆட்சி.. சூரசம்ஹாரமே சாட்சி!” – முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்!

Sekar Babu Slams TVK Government: இந்த விழா பக்தர்களின் நம்பிக்கைக்காக நடத்தப்படாமல், ரீல்ஸ் மற்றும் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஒரு கலப்பட ஆட்சி என்பதற்கு இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியே சாட்சி என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

“தமிழக வெற்றிக் கழக ஆட்சி கலப்பட ஆட்சி.. சூரசம்ஹாரமே சாட்சி!” – முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Nov 2026 19:53 PM IST

நவம்பர் 16, 2026: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு அரோகரா முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஒரு கலப்பட ஆட்சி என்றும், அதற்கு சூரசம்ஹார விழாவே சாட்சி என்றும் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சூரசம்ஹார விழாவில் வெடித்த சர்ச்சை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது பாடகர் வேல்முருகன், முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என முழக்கமிட்டதுடன், முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கும் அரோகரா எனக் கூறினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், பாடகர் வேல்முருகன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சியில் ரூ.400 கோடியில் திருப்பணிகள்

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூர் கோவிலில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த திருப்பணிகளுக்கு திமுக ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். எச்.சி.எல். நிறுவனம் மூலம் ரூ.200 கோடி மதிப்பிலும், கோவில் நிதியிலிருந்து மேலும் ரூ.200 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.400 கோடியில் பெருந்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: போலி நூல்கள் கொள்முதல் விவகாரம்.. வசமாக சிக்கிய அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர்.. கைது செய்த போலீசார்!

மேலும், திருச்செந்தூரில் ஐந்து படைவீடுகளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் 48 ஏக்கர் பரப்பளவில் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்தாலும் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

 இந்த ஆட்சி ஒரு கலப்பட ஆட்சி; சூரசம்ஹார நிகழ்ச்சியே சாட்சி

தொடர்ந்து பேசிய அவர், சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இறைவனுக்கு இணையாக மனிதர்களைக் கொண்டாடும் வகையில் நிகழ்வுகள் அமைந்ததாகவும், முருகனுக்கு அரோகரா என முழங்க வேண்டிய இடத்தில் முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகரா எனக் கூறியதாகவும் விமர்சித்தார்.

மேலும், முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்வுடன் முதலமைச்சரை ஒப்பிட்டுப் பேசியதையும், வேல் மற்றும் சேவல் கொடியைப் பிடித்தது தொடர்பான நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டிய சேகர்பாபு, இவை ஆகம மரபுகளுக்கு எதிரானவை எனக் கூறினார்.

மேலும் படிக்க: பைக் ஹாரன் அடித்ததை தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து! பட்டினப்பாக்கத்தில் வீடு புகுந்து இளைஞர்கள் வெறிச்செயல்!

இந்த விழா பக்தர்களின் நம்பிக்கைக்காக நடத்தப்படாமல், ரீல்ஸ் மற்றும் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஒரு கலப்பட ஆட்சி என்பதற்கு இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியே சாட்சி என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

 

Follow Us