நடிகர் சூர்யாவின் 48-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் அப்டேட்
Suriya 48 Movie Update Here | நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் சூர்யா 48. இந்தப் படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 3 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சீன் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த மூன்று படங்களும் தமிழ் மொழியில் வெளியாகி இருந்தாலும் மூன்று வெவ்வேறான மொழிகளில் இருந்து இயக்குநர்கள் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு நடிகர் சூர்யாவிற்கு ஹாட்ரிக் ஆண்டாக அமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விசயம் அவரது ரசிகர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் மற்றும் உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்களும் தமிழ் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி தற்போது சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 48 படம் தொடர்பான அப்டேட்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.




நடிகர் சூர்யாவின் 48-வது படத்தின் தற்போதைய நிலை என்ன?
சூர்யா 48 படம் குறித்த பலரது எண்ணத்திற்கு மாறாக, இது முழுக்க முழுக்க ஒரு கதையை மையமாக வைத்து மட்டுமே உருவாகும் படம் அல்ல. மாறாக, இது சூர்யாவின் ஒரு கமர்ஷியல் திரைப்படமாகும். ஒரு குற்றச் சம்பவத்தைச் சுற்றி நகரும் இந்தப் படத்தில், அந்தச் சம்பவத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கேமியோ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… Sai Pallavi: நான் போலீஸாக நடிப்பேன் என நினைத்ததே இல்ல – சாய் பல்லவி பேச்சு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya48 – Contrary to what many might think, the film is not a completely content-oriented film. Instead, it is a commercial film from #Suriya that revolves around a criminal case, within which #Suriya plays a doctor character who gets involved in the case.
A #TJGnanavel Film
In cinemas Summer 2027 https://t.co/f01CL3ktBN
— Movies Singapore (@MoviesSingapore) November 16, 2026
Also Read… Silambarasan: சிம்புவின் அரசன் பட ஷூட்டிங் நிலவரம் என்ன? இன்னும் முடியாததற்கு காரணம் இதுவா?