ஜேசன் Vs விஜய் சேதுபதி.. பிக் பாஸில் விஜய் சேதுபதி மற்றும் ஆடியன்ஸிடம் திமிரு காட்டிய ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!
Jason Arrogance Angers Vijay Sethupathi: தமிழில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் வார இறுதியான இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்துள்ளார். அதில் ஜேசன் விஜய் சேதுபதி மற்றும் அந்த நிகழ்ச்சியின் ஆடியன்ஸிடமும் திமிராக நடந்துகொள்ளும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது பிக் பாஸ் (Bigg Boss). இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த செப்டம்பர் 6ம் தேதியில் பிரம்மாண்டமாக தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கம் முதல், மற்ற சீசன்களிலிருந்து எல்லாமே வேறுபட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி, தொகுப்பாளராக இருந்து தொகுத்துவரும் நிலையில், மிக பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்நிலையில் 10வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்நிலையில் இன்று (15/11/2026) 2வது நாளாக போட்டியாளர்களை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சந்தித்துள்ளார். நேற்று (14/11/2026) ஒளிபரப்பான எபிசோடிலே ஜேசன் (Jason), விஜய் சேதுபதியிடம் திமிருகட்டுவதுபோல பேசியிருந்தார்.
அதை விஜய் சேதுபதி எச்சரித்த நிலையில், இன்று வெளியான 2வது ப்ரோமோவில் ஜேசன் மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் மத்தியில் திமிருகட்டுவதுபோல நடந்துகொண்டுள்ளார்.




இதையும் படிங்க: ஜெயிலர் 2 முதல் டாய்ரா வரை… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் இதுதான்!
விஜய் சேதுபதி மற்றும் ஆடியன்ஸிடம் திமிருகட்டிய ஜேசன்:
இந்த ப்ரோமோவில், விஜய் சேதுபதி ஜேசனிடம் “நீங்கள் கேப்டன் என்ற நிலையில், நீங்கள்தானே எல்லாமே பார்த்துக்கொள்ளவேண்டும் என்ன ஜேசன்” என கேட்டிருந்தார். அதற்கு அவர் கையை விரித்து அட்டிடியூட் காட்டுவதுபோலவே செய்தார். மேலும் விஜய் சேதுபதியிடம், “அதைத்தான் நானும் பேச வருகிறேன் நீங்கள் விடமாட்டிக்கிறீர்கள்” என அவர் கூறினார். உடனே விஜய் சேதுபதி, “என்ன ஜேசன் இதெல்லாம்” என கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: அனிருத் செய்த அந்த உதவி… நெகிழ்ந்து பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி!
மேலும் “நான் என்ன உங்களை பேசவிடவில்லை” என கேட்டிருந்தார். மேலும் ஆடியன்ஸை பார்த்து விஜய் சேதுபதி உங்களுக்கு புரிய வைக்கிறது ரொம்ப கஷ்டம் என பாக்கிற எல்லாருக்குமே புரிந்திருக்கும் என கூறினார், ஜேசன் காத்து அருகே கையை வைத்துவிட்டு ஆடியன்சைடு பார்த்து “வாட்?” என திமிராக கேட்டிருந்தார். விஜய் சேதுபதி உடனே, “ஜேசன் இதெல்லாம் பண்ணக்கூடாது ஜேசன், இந்த உடல் மொழியெல்லாம் இங்கு தேவை இல்லை” என அவரை மீண்டும் எச்சரித்தார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 70வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day70 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/h9g3UWewc0
— Vijay Television (@vijaytelevision) November 15, 2026
இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில், இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் இருக்கிறதாம். இந்த வாரத்தில் முத்தழகி மற்றும் அவினாஷ் இருவருமே வெளியேறுவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.