AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: நவம்பர் 18, 19 தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் – ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம் – எங்கெல்லாம் மழை?

Tamil Nadu Weather today: வருகற நவம்பர் 16, 2026 நாளை புயலாகவும், நவம்பர் 17, 2026 தீவிர புயலாகவும் வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் மிக கனமழையும் வாய்ப்பிருப்பதாக ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather Alert: நவம்பர் 18, 19 தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் – ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம் – எங்கெல்லாம் மழை?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Nov 2026 15:00 PM IST

சென்னை, நவம்பர் 15 : தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (Low Pressure Area) நவம்பர் 15, 2026 இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 840 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16, 2026 நாளை புயலாகவும், நவம்பர் 17, 2026 தீவிர புயலாகவும் வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 16, 2026 நாளை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மதுரை நகைக்கடை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உட்பட இருவர் சிறையில் அடைப்பு.. 6 கிலோ தங்கம் மீட்பு!!

எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

தமிழகத்தில் நவம்பர் 17, 2026 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் நவம்பர் 18, 2026 புதன்கிழமை அன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிதமான மழைக்கும், தென் மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்.. அலை அலையாய் குவியும் பக்தர்கள்.. களைகட்டிய மாநகர்!!

தமிழகத்தில் நவம்பர் 19, 2026 வியாழக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. மேலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us