திரையுலகினர் சார்பில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா – தயாரிப்பாளர் சங்கம் பகிர்ந்த தகவல்
Tamil Film Producers Honour CM Vijay : தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 6 மணி காட்சிகளுக்கு முதல்வர் விஜய் சமீபத்தில் அனுமதி வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திரையுலகினர் சார்பில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை, நவம்பர் 14 : தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 6 மணி காட்சிகளுக்கு முதல்வர் விஜய் சமீபத்தில் அனுமதி வழங்கினார். இதனையடுத்து புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு 6 காட்சிகள் திரையிடலாம் என்றும் காலை 6 மணி முதல் அதிகாலை 2.30 வரை திரையடலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் சனி, ஞாயிறு, உள்ளூர் பண்டிகை மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் 6 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் (Producer Council) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் நன்றி தெரிவித்தனர்.
திரையுலகினர் சார்பில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த திட்டம்
தமிழகத்தில் திரையரங்குகளில் கடந்த சில ஆண்டுகளாக முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக பழைய நடைமுறையான 6 மணிக்கு முதல் காட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கமும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகனையும் சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தான் தமிழக அரசு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிக்க : யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சி: ஏடிஎம் மையத்திற்குள் இறங்கிய சிறுவர்கள் – சிக்கியது எப்படி?




இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 14, 2026 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், முன்னாள் செயலாளர்கள் ஏ.எல். அழகப்பன், டி. சிவா, முன்னாள் பொருளாளர்கள் கஹஜாமைதீன், சந்திரபிரகாஷ் ஜெயின், வி.சி. குகநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், கமிலா நாசர், சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த ஆலோசித்து வருவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். மேலும் பேசியதாவது, காலை 6 மணி காட்சி குறித்த கோரிக்கை வைத்தவுடனேயே அரசு சார்பில் செய்து கொடுத்தனர். இதற்காக தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய் மற்றும் துறைசார்ந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பேசினர்.
இதையும் படிக்க : மேகதாது அணைக்கு செக்.. முக்கிய பைலுடன் டெல்லி விரையும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
மேலும் பேசிய அவர், பெரிய படங்களெல்லாம் தமிழகத்தை தவிர கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டு விடுகிறது. ஆனால், தமிழகத்தில் காலை 9 மணிக்குத்தான் திரையிடப்படுகிறது. இந்த இடைவெளியில் திரை விமர்சனங்கள் வெளியாகி திரைப்படங்களும் பாதிக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் சிறு திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருந்தது. இனிவரும் காலங்களில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதல்வர் விஜய்க்காக பாராட்டு விழா நடத்தி நிகழ்ச்சி நடத்த ஆலோசித்து வருகிறோம். நிகழ்ச்சிக்கு அவரின் அனுமதியும் கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.