AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பூமிக்கு அடியில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. தவெக நிர்வாகி வீட்டில் அதிரடி சோதனை.. தோண்டி துளாவிய புலனாய்வு அதிகாரிகள்!

Nagapattinam TVK functionary Boopalan : இலங்கைக்கு மெத்தபெட்டமைன் கடத்த முயன்ற வழக்கில் கைதான நாகப்பட்டினம் தவெக நிர்வாகி பூபாலன் வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இந்த சோதனை நடைபெற்றது .

பூமிக்கு அடியில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. தவெக நிர்வாகி வீட்டில் அதிரடி சோதனை.. தோண்டி துளாவிய புலனாய்வு அதிகாரிகள்!
தவெக நிர்வாகி பூபாலன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Nov 2026 19:09 PM IST

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.100 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பொருள் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் பகுதியில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ எடை கொண்ட 37 பாக்கெட்டுகளில் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.135 கோடி என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இதில் தொடர்புடையதாக நாகப்பட்டினம் மாவட்ட தவெக பிரமுகரும், வழக்கறிஞருமான பூபாலனை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், பூபாலன் மனைவி இலங்கை நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள் சோதனை

இந்த வழக்கில் தொடர்புடையதாக பூபாலன், மணிகண்டன், சுகன், சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், பூபாலன் வீட்டு தோட்டத்தில் உள்ள குட்டையில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், நாகையில் உள்ள பூபாலன் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் குட்டையில் நீரை அகற்றி சோதனை மேற்கொண்டனர். பூபாலன் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க: மதுரை தனிஷ்க் கடையில் 15 கிலோ நகை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் உள்பட இருவர் கைது!

பூமிக்கு அடியில் பலகோடி மதிப்பிலான போதைப்பொருள்

இதில், பலகோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பூபாலன் வீட்டில் பூமிக்கு அடியில் குழிதோண்டி புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்ற புலனாய்வு அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு உள்ளனர். இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

போதைப்பொருள் வழக்கின் பின்னணி

அதன் அடிப்படையில், திருச்சி மண்டல அதிகாரிகள் வேளாங்கண்ணியில் உள்ள பைனான்சியர் சுகன் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தான் அவரது வீட்டில் போதைப்பொருள் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 6 அடி கழிவறை.. 5.5 அடி நபர்.. எப்படி தூக்கிட்டு தொங்கியிருக்க முடியும்.. மதுரை லாக்கப் மரணத்தில் வழக்கறிஞர் கேள்வி!

Follow Us