AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எஸ்.பி.வேலுமணி- கே.ஏ.செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. நீண்ட நேரம் பேச்சு.. அதிமுகவில் அடுத்த பிரளயமா? பின்னணி என்ன!

S.P.Velumani Meet K.A.Sengottaiyan : கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் திடீர் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த திடீர் சந்திப்பு வெகு நேரம் நீடித்த நிலையில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.வேலுமணி- கே.ஏ.செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. நீண்ட நேரம் பேச்சு.. அதிமுகவில் அடுத்த பிரளயமா? பின்னணி என்ன!
எஸ்.பி.வேலுமணி- கே.ஏ. செங்கோட்டையன் சந்திப்பு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 14 Nov 2026 17:37 PM IST

கோயம்புத்தூரில் தவெக அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ ஆகியோர் திடீரென சந்தித்தனர். அப்போது, இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தவெக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, இருவரும் அருகருகே அமர்ந்து நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பியும், தவெக மாவட்ட செயலாளருமான மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். இவர்களும் நீண்ட நேரம் ஒன்றாக ஆலோசனை மேற்கொண்டனர்.

அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு

இதன் காரணமாக வரும் காலங்களில் அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன், எடப்பாடி மீதான அதிருப்தி காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவர் கூறியது போல, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வீட்டில் சிறுமி சடலம் புதைப்பு.. கற்பழித்து கொலையா? ஜேசிபி மூலம் தோண்டும் பணி தீவிரம்!

அதிமுகவில் நிலவும் உள்கட்சி பூசல்- மோதல்

இந்த நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில், இருதரப்பும் சமரசம் இன்றி செயல்பட்டு வருகிறது. இதனிடையே, அண்மையில் பெற்ற அதிமுக தொடக்க நாள் கூட்டம் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றில் எஸ் .பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு பங்கேற்காமல் புறக்கணித்திருந்தது. இவ்வாறாக அதிமுகவில் பல்வேறு உள்கட்சி பூசல்கள் நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிடிவி தினகரன்- எஸ்.பி. வேலுமணி சந்திப்பு

ஏற்கனவே, கோயம்புத்தூரில் நடைபெற்ற மற்றொரு திருமண விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சந்தித்து பேசி இருந்தனர். இது தொடர்பான, வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மதுரை தனிஷ்க் கடையில் 15 கிலோ நகை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் உள்பட இருவர் கைது!

Follow Us