புதிய மைல்கல்லை எட்டிய தாய் கிழவி படம்… மகிழ்ச்சியில் படக்குழு
Thaai Kizhavi movie has been selected for IFFI | தமிழ் சினிமாவில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றப் படம் தாய் கிழவி. இந்தப் படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருவது போல அவரது தயாரிப்பிலும் தமிழ் சினிமாவில் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. மேலும் பல அறிமுக இயக்குநர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வய்ப்புகளை வழங்கி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக் வெளியான பரசாக்தி படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான தாய் கிழவி படம் இந்த 2026-ம் ஆண்டி அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியளில் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தாய் கிழவி படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியின் காரணமாகவே தனது 26-வது படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சேயோன் என்ற இந்தப் படத்தை கமல் ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. படம் வருகின்ற 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




புதிய மைல்கல்லை எட்டிய தாய் கிழவி படம்… மகிழ்ச்சியில் படக்குழு:
தொடர்ந்து தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளியான தாய் கிழவி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஓடிடியில் வெளியான பிறகு உலக அளவில் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தாய் கிழவி படம் இந்திய சர்வதேச திரைப்பட விழா 2026-ம் ஆண்டில் திரையிடப்படுவதற்காக தேர்வாகி உள்ளது. இந்த செய்தி படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சீன் படத்தின் பார்ட் 2 வருமா? இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Taking #ThaaiKizhavi to another special milestone!
Proud to share that our film has been officially selected for the Indian Panorama 2026 at the International Film Festival of India (IFFI) ❤️
@Siva_Kartikeyan @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl @PassionStudios_ @realradikaa @Dir_SivakumarM @archanakalpathi @aishkalpathi @nivaskprasanna @Bala_actor @ActorMuthukumar @raichalrabecca @Sanlokesh @vivekvdop @RamuThangraj @valentino_suren @alagiakoothan @Arunrajakamaraj #KarumathurManimaran @Jegan_kaviraj @Vineesh1488 @tuneyjohn @ragulparasuram @ARKarthick @thivakar_theena @promoworkstudio @focus_vfx @vijaytelevision @JioHotstartam @saregamasouth @SushmaCineArts @ahimsafilms @SureshChandraa @DoneChannel1
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) November 14, 2026
Also Read… சுயமரியாதை திருமணம் செய்த அனிருத் – காவியா மாறன்.. உறுதி செய்த முன்னாள் அமைச்சர்..