இது அல்லவா சர்ப்ரைஸ்.. SK27 பட இயக்குநருக்கு ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் பரிசளித்த சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan gifted Ramkumar Balakrishnan: தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் சேயோன் மற்றும் SK27 என இரு படங்களிலும் ஒரே நேரத்தில் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் SK27 பட இயக்குநர் ராம்குமார் பாலாகிருஷ்ணனுக்கு நடித்தார் சிவகார்த்திகேயன் ஐஃபோன் பரிசாக கொடுத்துள்ளார். அது குறித்து ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). 2026 ஜனவரி மாதத்தில் வெளியான இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் (Seyon Movie) என்ற திரைப்படத்தில் இணைந்தார். இந்த படமானது அதிரடி மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இந்த படமானது சிறப்பான படமாக சிவகார்த்திகேயனுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கின்போதே சிவகார்த்திகேயன், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Director Ramkumar Balakrishnan) இயக்கத்தில் SK27 என்ற படத்திலும் நடித்துவருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கேங்ஸ்டராக நடிப்பதாக வட்டாரங்கள் கூறுகிறது.
அந்த விதத்தில் இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு சிவகார்த்திகேயன் விலையுயர்ந்த ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் போனை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நன்றிதெரிவித்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பதிவை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: பெரிய திட்டத்தில் இணையும் சூர்யா – தனுஷ்… இயக்குநர் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் அளித்த பரிசு குறித்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Got a loveable surprise from @Siva_Kartikeyan anna ❤️ Thanks for the gift na🫂 Really means a lot! 🙏✨
#SK27 https://t.co/aYmxJwJ443— Ramkumar Balakrishnan (@ImRamkumar_B) November 2, 2026
இந்த பதிவில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “சிவகார்த்திகேயன் அண்ணாவிடம் ஒரு அருமையான சர்ப்ரைஸ் கிடைத்தது.பரிசிற்கு நன்றி அண்ணா, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என அதில் அவர் பகிர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு “ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் – பர்கண்டி” போனை பரிசாக வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: அரசன் திரைப்பட ரிலீஸ் தாமதம்… காரணத்தை ஓபனாக சொன்ன திருப்பூர் சுப்ரமயணம்!
இந்த போன் இந்திய சந்தை விளைபடி கிட்டத்தட்ட ரூ 1,79,900 இருக்கும். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது SK27 பட இயக்குநருக்கு அந்த படத்தின் வெளியீட்டிற்கு முன்னே இவ்வாறு பிரம்மாண்ட பரிசு ஒன்றை கொடுத்துள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் மத்தியில் இது தொடர்பான தகவல்கள் வைரலாகிவருகிறது.
சிவகார்த்திகேயனின் SK27 பட ரிலீஸ் எப்போது இருக்கும்:
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் திரைப்படம்தான் SK27. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துவருகிறார். இந்த படம் அதிரடி மற்றும் ஆக்ஷன் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல்கட்ட ஷட்டிங் முடிந்த நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.