சிவகார்த்திகேயன்
கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 1985ம் ஆண்டு தமிழத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார். இவர் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றிவந்த நிலையில், அதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இந்த பிரபலத்தை கொண்டு சினிமாவில் நுழைந்த இவருக்கு, ஆரம்ப படங்களில் ஓரளவுதான் வரவேற்புகள் கிடைத்திருந்தது. அந்த வகையில் இவருக்கு சினிமாவில் முதல் படமாக அமைந்தது மெரினா. கடந்த 2011ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தை அடுத்து சில படங்களில் துணை வேடத்திலும் நடித்திருக்கிறார். தனது நகைச்சுவை ஜானர், டைமிங் காமெடி மூலம் மக்களிடையே பிரபலமானார். அந்த வகையில் சிறு சிறு படங்களில் நடித்துவந்த இவர், தற்போது உச்ச நடிகர்களுக்கே போட்டிபோடும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அதில் இவருக்கு வெற்றிவாகை சூடிய படமாக அமைந்தது 2024ல் வெளியன் அமரன். இந்த படத்தை அடுத்ததாக ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். தற்போது இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Sivakarthikeyan: நான் ரொம்பவே எமோஷனலான நபர்தான்.. எனக்கும் அது நிச்சயம் இருக்கும்- சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்!
Sivakarthikeyan About His True Personality: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் கதாநாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு நுழைந்தவர் என்று தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் தனது சுய குணம் குறித்து முன்பு ஒரு நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Dec 23, 2025
- 11:13 am IST
Sudha Kongara: சிவகார்த்திகேயன் அற்புதமான நடிகர்… பராசக்தி படத்திற்கு ஓகே சொன்னது இப்படித்தான்- சுதா கொங்கரா!
Sudha Kongara About Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக பிரம்மாண்ட ஹிட் படங்களை கொடுத்துவருபவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் தமிழில் வரும் 2026ம் ஆண்டு வெளியாகவுள்ள படம்தான் பராசக்தி. இந்த படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டது குறித்து, இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Dec 23, 2025
- 11:13 am IST
Sivakarthikeyan: பராசக்தி படம் வீரம், புரட்சி, காதலை பேசும்.. பொங்கலுக்கு நல்ல கொண்டாட்ட படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!
Sivakarthikeyan About Parasakthi Movie: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் வரும் 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு வெளியாகும் படம்தான் பராசக்தி. இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பான எக்சிபிஷன் இன்று சென்னையில் தொடங்கிய நிலையில், அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் பராசக்தி படம் குறித்து பேசியுள்ளார்.
- Barath Murugan
- Updated on: Dec 23, 2025
- 11:13 am IST
Sivakarthikeyan: தலைவா… ரீ ரிலீஸில் படையப்பா படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!
Sivakarthikeyan celebrate Padaiyappa Re-release: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்கள் பட்டியலில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் பராசக்தி வெளியாகி காத்திருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு படையப்பா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இப்படத்தை திரையரங்கில் பார்த்த சிவகார்த்திகேயன் கொண்டாடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- Barath Murugan
- Updated on: Dec 23, 2025
- 11:13 am IST
Soori: யாரும் யாருக்கும் போட்டி இல்லை.. விஜய் – சிவகார்த்திகேயன் குறித்து சூரி கருத்து!
Soori About Vijay And Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வளர்ந்துவரும் கதாநாயகன்தான் சூரி. இவரின் நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டுவருகிறது. இன்று (2025 டிசம்பர் 14ம் தேதி) மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரி, விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையேயான ஒப்பீடு குறித்து மனம்திறந்துள்ளார் .
- Barath Murugan
- Updated on: Dec 23, 2025
- 11:13 am IST
சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் இப்படிதான் இருக்கும்… வைரலாகும் தகவல்
Sivakarthikeyan 26 Movie: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அவரது 25-வது படம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைக்க உள்ளார். இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Dec 23, 2025
- 11:13 am IST
அமெரிக்கா செல்லும் சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு.. இதுதான் காரணமா?
Venkat Prabhu And Sivakarthikeyan Movie: தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் சிவகார்த்திகேயன். இவர் பராசக்தி படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபுவுடன் புது படத்தில் இணைகிறார். இந்த படத்தின் ஸ்பெஷல் விஷயத்திற்காக இருவரும் அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளியாகியுள்ளது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Dec 23, 2025
- 11:14 am IST
என் ரசிகர்கள் என்னை வழிபாடு செய்வதை நான் விரும்பவில்லை – சிவகார்த்திகேயன்
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Dec 23, 2025
- 11:14 am IST
Sivakarthikeyan: ‘பெரும் சேனை ஒன்று தேவை’… பராசக்தி பட டப்பிங் பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Parasakthi Movie Dubbing: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் பராசக்தி. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணியை சிவகார்த்திகேயன் தொடங்கியதாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Barath Murugan
- Updated on: Dec 23, 2025
- 11:14 am IST
ஹீரோ லா உங்களுக்கு செட் ஆகாதுன்னு சொன்னாரு.. தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan About Producer Shirish: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் தயாராகிவரும் நிலையில், விரைவில் பராசக்தி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில், நிஞ்ஜா என்ற பட ஷூட்டிங் பூஜையில் கலந்துகொண்டார். அதில் தயாரிப்பாளர் சினிஷ் குறித்து அவர் பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: Dec 23, 2025
- 11:14 am IST
சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்.. கோவாவுக்கு செல்லும் சிவகார்த்திகேயன்- சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ!
IFFI 2025: கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்த திரைப்படம்தான் அமரன். இந்த படத்தின் வெற்றியை முன்னிட்டு, 2025ம் ஆண்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில், அங்கு அமரன் படக்குழு சென்றுள்ளனர். இது தொடர்ப்பன வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: Dec 23, 2025
- 11:14 am IST