மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானங்களின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று உரசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டிஜிசிஏ விசாரணையை தொடங்கியுள்ளது. இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்ட தகவலின்படி, கோயம்புத்தூருக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் காத்திருந்த போது, ஹைதராபாத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கியது.