சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் நடிகர் ரியோ ராஜ் – வைரலாகும் தகவல்
Actor Rio Raj New Movie Update: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக அவர் நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக பலப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது பராசக்தி படம். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் தொடர்ந்து வசூலில் ரூபாய் 100 கோடிகளை கடந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான கனா என்ற படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, வாழ், டாக்டர், டான், குரங்கு பெடல், கொட்டுக்காளி, ஹவுஸ் மேட்ஸ் மற்றும் தற்போது தாய் கிழவி ஆகியப் படத்தை தயாரித்துள்ளார். இதி தாய் கிழவி படம் வருகின்ற 20-ம் தேதி பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் நடிகர் ரியோ ராஜ்:
நடிகர் ரியோ ராஜ், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ஒரு படத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கவுள்ளார் என்றும் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன, மேலும் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read… நடிகர் சூர்யா படத்தை இயக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ்?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
— Actor #RioRaj is set to act once again in a film produced by #Sivakarthikeyan.
— This movie will be directed by debutant director #Karthikeyan.
— The film’s pre-production work is currently progressing at a brisk pace, and the shooting is scheduled to begin in the second week… pic.twitter.com/mDcmUHHjXU— Movie Tamil (@_MovieTamil) January 25, 2026
Also Read… ரீ ரிலீஸாகும் விஜயின் திருப்பாச்சி படம்? வைரலாகும் பதிவு