AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ பட ரிலீஸ் தேதி எப்போது? – வெளியான அறிவிப்பு இதோ!

Manithan Deivamagalam Release Date: தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் செல்வராகவன். இவர் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் மனிதன் தெய்வமாகலாம். இப்படம் எப்போது வெளியாகும் என படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ பட ரிலீஸ் தேதி எப்போது? – வெளியான அறிவிப்பு இதோ!
மனிதன் தெய்வமாகலாம் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Mar 2026 20:34 PM IST

கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது நடிகராக இருக்கும் பிரபலங்களின் வரிசையில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன் (Selvaraghavan). இவர் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவந்த நிலையில், தற்போது இவர் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் “மனிதன் தெய்வமாகலாம்” (Manithan Deivamagalam). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கியிருந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதில் செல்வராகவன் லீட் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை குஷீ ரவி (Kushee Ravi) நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள நிலையில், வ்யோன் எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் (Dhanush) சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து இப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. அந்த வகையில் தற்போது, இந்த “மனிதன் தெய்வமாகலாம்” என்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாம்.

இதையும் படிங்க: 2027ம் ஆண்டு வரை இருக்கும் அஜித் குமாரின் கார் ரேஸ்.. அப்போ AK64 பட ஷூட்டிங் எப்போது?

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

மனிதன் தெய்வமாகலாம் பட தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் :

இந்த மனிதன் தெய்வமாகலாம் திரைப்படத்தில் செல்வராகவன் மற்றும் குஷீ ரவி முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், அவர்களுடன் நடிகர்கள் சதீஸ், கௌசல்யா, மைம் கோபி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஒரு கிராமத்தை மற்றும் தனது குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் சாதாரண நபரின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. மேலும் இது உண்மை சம்பவத்தை அடிப்படியாக வைத்து இயக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அவ்வை சண்முகி படத்திற்காக கமல் ஹாசன் அவ்வளவு மெனக்கெட்டார் – ரமேஷ் கண்ணா

அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. இப்படம் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் வாங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Follow Us