Ajith Kumar: 2027ம் ஆண்டு வரை இருக்கும் அஜித் குமாரின் கார் ரேஸ்.. அப்போ AK64 பட ஷூட்டிங் எப்போது?
Ajith Kumar Car Racing: அஜித் குமார் கடந்த 2024ம் ஆண்டு இறுதிமுதல் கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டுவரும் நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK64 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் 2027ம் ஆண்டு வரை அஜித் கார் ரேஸில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார். இவர் சினிமாவாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் (Car Race) போட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு இறுதிமுதல் கார் ரேஸ் பயிற்சிகளில் நடிகர் அஜித் குமார் தீவிரமாக இருந்துவருகிறார். இந்தியாவின் சார்பாக இவர் தொடர்ந்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இதுவரை கிட்டத்தட்ட 6 போட்டிகளில் அவர் பங்குபெற்றிருந்த நிலையில், மொத்தமாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். மூன்று போட்டிகளில் 3வது இடத்தையும், ஒரு போட்டியில் 2வது இடமும் மற்றும் ஒரு போட்டியில் 4வது இடத்தையும் அஜித்தின் அணி பெற்றிருந்தது.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக துபாயில் (Dubai) கார் ரேஸ் பயிற்சியில் அஜித் ஈடுபட்டுவந்தார். அங்கு போர் கலவரம் வெடித்த நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பினார். இந்நிலையில் அஜித் குமாரின் ரேஸ் வரும் 2027ம் ஆண்டுவரை இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: எனது மற்ற படங்களை விட அரசன் பட ஷூட்டிங் விரைவில் முடியும் – இயக்குநர் வெற்றிமாறன்
அஜித் குமாரின் ரேஸ் குறித்து அறிவிக்கப்பட்ட பதிவு:
From the desk of Ajith Kumar Racing comes the official Ajith Redant Racing Calendar 2026–27. 🏁🔥
A new season. New challenges. One passion for speed.
Gear up for an electrifying year of racing as the journey continues on tracks across the world. 🏎️💨#AjithKumar… pic.twitter.com/DyqtXUCFIN— Ajithkumar Racing (@Akracingoffl) March 15, 2026
அஜித் குமாரின் AK64 திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது:
நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக 2025ம் ஆண்டில் குட் பேட் அக்லி என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடுதான் அஜித் கார் ரேஸ் போட்டிகளில் இணைந்திருந்தார். அந்த வகையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில்தான் தனது 64வது படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இன்னும் இதன் தயாரிப்பு நிறுவனம் உறுதியாகவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதற்காக மட்டுமே நான் பாடல்களை உருவாக்க நினைக்கவில்லை – சாய் அபயங்கர்!
இதன் ஷூட்டிங் 2026 பிப்ரவரி இறுதியில் நடக்கும் என இயக்குநர் கூறியிருந்த நிலையில், இதுவரை அது நடக்கவே இல்லை. அந்த வகையில் தற்போது 2027ம் ஆண்டு ஜனவரி வரை, ஒவ்வொரு மதத்திற்கு ஒரு போட்டி என்ற கணக்கில், நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்கிறார். அந்த வகையில் அவரின் AK64 படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள். மேலும் இதுகுறித்து இணயக்குநரும் சரி, அஜித் குமாரும் சரி இதுவரை எந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.