AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எனது மற்ற படங்களை விட அரசன் பட ஷூட்டிங் விரைவில் முடியும் – இயக்குநர் வெற்றிமாறன்

Director Vetrimaaran talks about Arasan movie: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றி அரசன் படத்தின் ஷூட்டிங் குறித்து பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

எனது மற்ற படங்களை விட அரசன் பட ஷூட்டிங் விரைவில் முடியும் – இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Mar 2026 14:00 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியான 6 படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மொத்தமாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 8 படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அதில் 4 படங்களில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தை எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முன்னதாக முடிவடைந்த நிலையில் அடுத்ததாக இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வருகின்ற 16-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டில் தொடங்கும் என்று இயக்குநர் வெற்றிமாறன் முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெற்றிமாறன் சமீபத்தில் அரசன் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனது மற்ற படங்களை விட அரசன் பட ஷூட்டிங் விரைவில் முடியும்:

அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, இந்த முறை, நான் அரசன் படத்தின் கதையை எழுதி முடித்த பின்னரே படப்பிடிப்புக்குச் சென்றேன். எனது மற்ற படங்களை விட இந்த அரசன் படம் விரைவாகவே உருவாகும். இன்னும் சில நாட்களில், எங்களால் படத்தின் சில காட்சிகளை வெளியிட முடியலாம். அதுவரை, அவற்றை நாங்கள் வெளியிடாமல் வைத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் அவர் படங்களை இயக்குவதில் மிகவும் அதிக நாட்களை எடுத்துக்கொள்வார் என்ற விமர்சனம் திரையுலகில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… Vijay Sethupathi: ஒன்னு ரெண்டு இல்ல.. விஜய் சேதுபதியின் கைவசம் உள்ள படங்கள் இத்தனையா?

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு:

Also Read… Silambarasan: கருப்பு படத்திற்கு பாடல் பாடிய சிலம்பரசன்? – சாய் அபயங்கர் வெளியிட்ட பதிவு வைரல்!

Follow Us