AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசன் மற்றும் வட சென்னை 2 படங்களின் நிலை என்ன? இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்

Director Vetrimaaran : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள படங்கள் குறித்து அவர் பேசியது வைரலாகி வருகின்றது.

அரசன் மற்றும் வட சென்னை 2 படங்களின் நிலை என்ன? இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்த சூப்பர் அப்டேட்
வெற்றிமாறன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 Mar 2026 11:35 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனது பொல்லாதவன் படத்தின் மூலமாக தான். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர்களின் கூட்டணி மட்டும் அடுத்தடுத்து ஆடுகளம்,  வட சென்னை, அசுரன் என தொடர்ந்து அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சிலம்பரசன் உடன் அரசன் படத்திற்காக கூட்டணி வைத்துள்ளார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளது. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அரசன் படத்தில் டைட்டில் டீசர் வெளியாகி தமிழ் திரையுலக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றது.

அரசன் மற்றும் வட சென்னை 2 படங்களின் நிலை என்ன?

இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் கென் கருணாஸ் எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள யூத் படத்தின் ப்ரியூ ஷோவில் கலந்துகொண்டார். அப்போது அரசன் மற்றும் வட சென்னை 2 படங்கள் தொடர்பான அப்டேட்களை அவர் தெரிவித்துள்ளார். அதில் அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு வருகின்ற 16-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு தொடங்க உள்ளது என்று தெரிவித்தார். மேலும் வட சென்னை 2 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… தாய் கிழவி படத்தின் வெற்றியால் தள்ளிப்போன சேயோன் பட ஷூட்டிங் – சிவகார்த்தியேன் ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் வெற்றிமாறன் பேச்சு:

http://

Also Read… சூர்யா 47 படத்தில் கேமியோ தோற்றத்தில் பிரபல தமிழ் நடிகர்… வைரலாகும் தகவல்

Follow Us