AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆன் தி வே… போஸ்டர் வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டிய Hi படக்குழு

Hi Movie New Poster Viral On Social Media: நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஹாய். இந்தப் படத்திலிருந்து புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆன் தி வே… போஸ்டர் வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டிய Hi படக்குழு
ஹாய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Mar 2026 13:58 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கவின். இவரது நடிப்பில் திரையுலகில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் கவின் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியானது. அதன்படி நடிகர் கவின் நடிப்பில் வெளியான கிஸ் மற்றும் மாஸ்க் படம் என இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் மட்டும் இன்றி ஓடிடியில் வெளியான பிறகு மற்ற மொழி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து தனது நடிப்பில் வெளியாகும் படங்களை ஹிட் கொடுத்து வரும் நடிகர் கவின் தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அதன்படி அவர் நடிகை நயன்தாராவிற்கு ஜோடியாக தற்போது நடித்து வரும் படம் ஹாய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் மன சங்கர வர பிரசாத் காரு படம் திரையரங்குகளில் வெளியானது. நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து இருந்த இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.

போஸ்டர் வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டிய Hi படக்குழு:

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஹாய். இந்தப் படம் தொடர்பான அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆன் தி வே என்று குறிப்பிட்டுள்ளனர். அது படத்தின் ரிலீஸ் தொடர்பான அப்டேட்டாக இருக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Sai Pallavi: தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி – சாய் பல்லவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு!

ஹாய் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் சேதுபதி பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா… இணையத்தை கலக்கும் தகவல்

Follow Us