சிஎம் வீட்டருகே மீட்கப்பட்ட கைக்குழந்தை.. கள்ளக்காதலில் பிறந்ததால் வளர்க்க விருப்பமில்லை.. கல் நெஞ்ச தாய் ஷாக் பதில்!
Child Found Near CM Residence : முதல்வர் விஜய் வீடு அருகே மீட்கப்பட்ட கைக்குழந்தையின் தாயை போலீசார் கண்டு பிடித்த நிலையில், அவர் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லை என்று போலீசாரிடம் அதிர்ச்சி பதிலை தெரிவித்து உள்ளார்.
சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் முதல்வர் விஜய் வீட்டின் பின்புறம் 4- ஆவது குறுக்கு தெருவில் சாக்கு முட்டையில் பச்சிளம் பெண் குழந்தை இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் மற்றும் குழந்தைகள் நல குழுவினர் அந்த குழந்தையை மீட்டு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இது தொடர்பாக, நீலாங்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில், இரவு நேரத்தில் இரு பெண்கள் சாக்கு மூட்டையில் குழந்தையை வைத்து சாலை ஓரம் விட்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இரவில் சாக்குப் பையில் குழந்தையை விட்டு சென்ற தாய்
அதில், தாய் கை காட்டும் இடத்தில் குழந்தையை அதன் தாய் அழுதபடியே வைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற சம்பவம் பதிவாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை விட்டு சென்றது நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் வசித்து வரும் திருமணம் ஆகாத 35 வயது பெண் என்பது தெரிய வந்தது. அவரிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதாவது, அந்த பெண்ணுக்கும், அவரது ஆண் நண்பருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததன் காரணமாக அந்த பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.
மேலும் படிக்க: சார் பதிவாளர் நில ஆவண முறைகேடு வழக்கு.. திருவாரூரில் முக்கிய குற்றவாளி கைது.. சிபிசிஐடி நடவடிக்கை!




கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வளர்க்க விரும்பவில்லை
இதற்கு அந்த பெண்ணின் ஆண் நண்பர் உரிய ஆதரவும், பாதுகாப்பும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், குழந்தையை வளர்க்க விரும்பாத அந்த பெண் சாலையில் விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். அத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் ஆண் நண்பரின் தகவலை அந்த பெண் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, ஆலந்தூரில் உள்ள குழந்தைகள் நல ஆய்வாளர் சீலா முன்னிலையில் குழந்தையின் தாய் மற்றும் அவரது தாய் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது, தனக்கு திருமணம் ஆகாததால் குழந்தையை வளர்ப்பதற்கு விருப்பமில்லை என்று அந்த பெண் தெரிவித்தார்.
குழந்தை பகல் நேர பராமரிப்பு மையம்
இதற்கு, குழந்தை பிறந்து 60 நாட்கள் ஆன பின்னரே சட்டபூர்வமாக குழந்தைகள் நல குழு பொறுப்பில் தத்து கொடுக்க முடியும் என்று ஆய்வாளர் சீலா தெரிவித்தார். அதன்படி, 60 நாட்களுக்குப் பிறகு குழந்தையை, குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக அந்த பெண் கடிதம் எழுதிக் கொடுத்தார். அந்த குழந்தை 4 நாட்களில் குழந்தையை பகல் நேர பராமரிப்பு மையத்தில் ஒப்படைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் பயங்கரம்… தொழிற்சாலை கட்டடம் இடிந்து விபத்து.. இடிபாடில் சிக்கி 3 பேர் பலி!