AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடைத்தேர்தலே அறிவிக்கல.. அதுக்குள்ள பட்டுவாடாவா.. விராலிமலையில் ரூ.2 ஆயிரம் பரிசு பொருள்கள் விநியோகம்.. ரகுபதி குற்றச்சாட்டு!

Raghupathy alleged C Vijayabaskar : விராலிமலை இடைத்தேர்தலை மையமாக வைத்து தீபாவளிக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருள்களை சி. விஜயபாஸ்கர் விநியோகம் செய்து வருவதாக திமுகவின் முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டி உள்ளார் .

இடைத்தேர்தலே அறிவிக்கல.. அதுக்குள்ள பட்டுவாடாவா.. விராலிமலையில் ரூ.2 ஆயிரம் பரிசு பொருள்கள் விநியோகம்.. ரகுபதி குற்றச்சாட்டு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 05 Nov 2026 19:57 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலையில் இடைத்தேர்தலை மையமாக வைத்து தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அதிக அளவிலான புதிய திட்டங்கள் வரும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், எந்த புதிய திட்டங்களும் அறிவிக்காமல் அமைதியாக சென்று விட்டார். முதல்வர் நிகழ்ச்சிக்கு மாணவர்களை வர வைப்பதற்காக மகளிர் கல்லூரி செமஸ்டர் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என மக்கள் காத்திருந்தார்கள்.

முதல்வர் வருகையில் ஏமாற்றம் அடைந்த புதுக்கோட்டை மக்கள்

ஆனால், அதிலும் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. முதல்வர் வருகைக்காக ரூ. 10 கோடி செலவு செய்து 45 கிலோமீட்டர் தொலைவிற்கு பேரி கார்டு அமைத்து பொதுமக்கள் பணம் விரயமாக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறாத இடத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டது தான் மிச்சம். இதை தவிர வேறு எந்த விதமான சம்பவங்களும் புதுக்கோட்டையில் நடைபெறவில்லை. அடுத்ததாக, விராலிமலை இடைத்தேர்தலுக்காக வரவில்லை என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் பயங்கரம்… தொழிற்சாலை கட்டடம் இடிந்து விபத்து.. இடிபாடில் சிக்கி 3 பேர் பலி!

எவர்சில்வர் பாத்திரம், ஸ்வீட் பாக்ஸ், ரசகுல்லா டின் விநியோகம்

ஆனால், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் எவர்சில்வர் பெரிய பாத்திரம், ஸ்வீட் பாக்ஸ், ரசகுல்லா டின் என வீடு தோறும் பரிசு வழங்கி வருகிறார். ஒரு வீட்டுக்கு சுமார் ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை முதல் கட்டமாக வழங்கத் தொடங்கி உள்ளார். இதுதான் தூய்மையான ஆட்சியா. மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம். ஆனால் மக்கள் எங்களுக்கு ஓட்டு போடுவாங்கன்னு சொல்ற தூய்மையான ஆட்சியில் இதெல்லாம் நடக்கிறது. விஜயபாஸ்கர் சுமார் 90 ஆயிரம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வீடு தவறாமல் தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி வருகிறார்.

புதுக்கோட்டை எந்த திட்டமும் அறிவிக்கவில்லை

எத்தனை கோடியை அங்கே கொட்டப் போகிறார் என்று பார்க்க வேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தரம் என்று கூறுவார்கள். எனவே தான், விராலிமலை தொகுதியே இங்கே உங்களுக்கு நான் உதாரணமாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன். விராலிமலை இடைத்தேர்தலுக்காக அவர்கள் வேலை செய்யவில்லை என்று சொன்னாலும் பணம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த திட்டங்களையும் அறிவிக்காமல் ஒரு முதல்வர் வந்து சென்றுள்ளார் என்று விமர்சித்தார்.

மேலும் படிக்க: குடைக்குள் மழை தெரியும்.. அதென்ன ரயிலுக்குள் மழை.. நாகர்கோவில்- மும்பை விரைவு ரயிலில் நிகழ்ந்த கூத்தை பாருங்க!

Follow Us