AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs SL: டெல்லி வேண்டாம்.. முக்கிய போட்டியை விசாப்பட்டினத்திற்கு மாற்றிய பிசிசிஐ!

BCCI Relocates India vs Sri Lanka Match: பிசிசிஐ, 2026 டிசம்பரில் நடைபெறவிருந்த இந்தியா-இலங்கை ஒருநாள் தொடரின் முதல் போட்டியை டெல்லியிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றியுள்ளது. டெல்லியின் மோசமான காற்று மாசுபாடு மற்றும் அருண் ஜெட்லி மைதானத்தின் புனரமைப்புப் பணிகளே இந்த மாற்றத்திற்குக் காரணம். டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

IND vs SL: டெல்லி வேண்டாம்.. முக்கிய போட்டியை விசாப்பட்டினத்திற்கு மாற்றிய பிசிசிஐ!
இடம் மாறிய போட்டிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Nov 2026 20:16 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), டெல்லியின் நச்சுத்தன்மை வாய்ந்த காற்று மாசுபாட்டின் காரணமாக முக்கிய போட்டியை இடம் பெற்றுள்ளது. வருகின்ற 2026 டிசம்பர் மாதம், இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய தொடருக்காக இந்தியாவிற்கு (Indian Cricket Team) சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்தத் தொடர் வருகின்ற 2026 டிசம்பர் 13 ஆம் தேதி ஒருநாள் போட்டிகளுடன் தொடங்கும். முதல் ஒருநாள் போட்டி முதலில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ALSO READ: நியூசிலாந்துடன் மோதல்.. வெலிங்டனில் இந்திய அணியின் சாதனை எப்படி..?

இந்த மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ இன்று அதாவது 2026 நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் பகிர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDA), பிசிசிஐயிடம் மைதானத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கையும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. டெல்லியின் மோசமான வானிலை (மாசுபாடு) மற்றும் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாக டெல்லி கிரிக்கெட் வாரியம் இந்த மாற்றத்தைக் கோரியிருந்தது.

பிசிசிஐயின் விளக்கம்:


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செய்திக்குறிப்பில், “டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) கோரிக்கையின் பேரில் போட்டி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. சாத்தியமான வானிலை கட்டுப்பாடுகள் மற்றும் மைதானத்தில் முன்மொழியப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி இனி 2026 டிசம்பர் 13 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்,” என்று தெரிவித்துள்ளது.

ALSO READ: டெல்லியில் அதிகரிக்கும் மாசுப்பாடு.. இந்தியா-இலங்கை போட்டிக்கு சிக்கல்!

இந்தியா-இலங்கை ஒருநாள் தொடர் அட்டவணை

  • ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 13, 2026 | பிற்பகல் 2:00 மணி – முதல் ஒருநாள் போட்டி (விசாகப்பட்டினம்)
  • புதன்கிழமை, டிசம்பர் 16, 2026 | பிற்பகல் 2:00 – 2வது ஒருநாள் (பெங்களூரு)
  • சனிக்கிழமை, டிசம்பர் 19, 2026 | பிற்பகல் 2:00 மணி — 3வது ஒருநாள் போட்டி (அகமதாபாத்)

இந்தியா-இலங்கை டி20 தொடர் அட்டவணை

  • செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 22, 2026 | இரவு 7:00 மணி — முதல் டி20 (ராஜ்கோட்)
  • வியாழக்கிழமை, டிசம்பர் 24, 2026 | இரவு 7:00 மணி — 2வது டி20 (கட்டாக்)
  • ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 27, 2026 | இரவு 7:00 மணி — 3வது டி20 (புனே).

தற்போது, ​​பிசிசிஐ இந்த வடிவத்திலான தொடருக்கான இந்திய அணியை இன்னும் அறிவிக்கவில்லை. போட்டி அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

Follow Us