AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: நியூசிலாந்துடன் மோதல்.. வெலிங்டனில் இந்திய அணியின் சாதனை எப்படி..?

India vs NZ 2nd ODI: சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்றது. வரவிருக்கும் 2வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் நடைபெற உள்ளது. இங்கு இந்திய அணியின் கடந்தகால ஆட்டத் திறனை ஆய்வு செய்தும், நியூசிலாந்தின் சாதனையை ஆய்வு செய்தும், இப்போட்டியின் முக்கியத்துவத்தைப் பற்றி இக்கட்டுரை விவாதிக்கிறது.

IND vs NZ: நியூசிலாந்துடன் மோதல்.. வெலிங்டனில் இந்திய அணியின் சாதனை எப்படி..?
இந்தியா - நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Nov 2026 18:15 PM IST

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (Ind vs Nz) இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆக்லாந்து ஸ்டேடியத்தில் எளிதாக வென்று சிறப்பான தொடக்கத்தை பெற்றது. தற்போது, ​​இந்திய அணி (Indian Cricket Team) இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியை வருகின்ற 2026 நவம்பர் 7ம் தேதி வெலிங்டன் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள உள்ளது. அதில், தங்களது வெற்றிப் பயணத்தைத் தொடர சுப்மன் படை முனைவார்கள். இதுவரை இங்கு நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி, நியூசிலாந்து அணியையே எதிர்கொண்டுள்ளனர்.

ALSO READ: டெல்லியில் அதிகரிக்கும் மாசுப்பாடு.. இந்தியா-இலங்கை போட்டிக்கு சிக்கல்!

வெலிங்டனில் இந்திய அணி கடைசியாக விளையாடியது எப்போது..?


இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரின் 2வது போட்டியை வெலிங்டன் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. இதே ஸ்டேடியத்தில்தான் இந்திய அணி கடைசியாக 2019ம் ஆண்டு விளையாடினர். இந்த ஸ்டேடியத்தில் விளையாடிய 4 போட்டிகளில், இந்திய அணி இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளனர். மேலும் ஒரு போட்டி கைவிடப்பட்டது. இந்திய அணி தனது முதல் ஒருநாள் போட்டியை 2003ம் ஆண்டு இங்கு விளையாடி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2009ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. 2014ம் ஆண்டு, இங்கு நடைபெற்ற 3வது போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 87 ரன்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி கடைசியாக இங்கு ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது 2019ம் ஆண்டுதான், அப்போது இந்திய அணி நியூசிலாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர்.

ALSO READ: கோலியின் மாயாஜால ஒற்றைக் கை கேட்ச்.. ரோஹித் அதிவேக ஃபீல்டிங்.. வைரலாகும் வீடியோ!

வெலிங்டனில் நியூசிலாந்து அணியின் சாதனை எப்படி..?

வெலிங்டன் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணி 30 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில் 17 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. மழை காரணமாக 2 போட்டிகள் கைவிடப்பட்டன. தொடரை சமன் செய்ய, நியூசிலாந்து இந்த சாதனையைத் தக்கவைக்க முயற்சிக்கும். வெலிங்டன் ஸ்டேடியத்தில் நியூசிலாந்தின் கடைசித் தோல்வி 2019-ல் இந்தியாவுக்கு எதிராக ஏற்பட்டது. அதன் பிறகு, நியூசிலாந்து இங்கு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

Follow Us