AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சொமேட்டோவில் இனி பிடித்த கடைகளில் ஆர்டர் செய்யலாம்.. தூரம் ஒரு Matter இல்லை.. வந்தது புதிய அம்சம்!

Zomato Launches Limitless Delivery | சொமேட்டோவில் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்துக்கொள்ளும் வகையில் லிமிட்லஸ் டெலிவரி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சொமேட்டோவில் இனி பிடித்த கடைகளில் ஆர்டர் செய்யலாம்.. தூரம் ஒரு Matter இல்லை.. வந்தது புதிய அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Nov 2026 19:11 PM IST

இந்திய பொதுமக்கள் மத்தியில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதற்காக ஸ்விக்கி (Swiggy), சொமேட்டோ (Zomato) உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தங்களது சேவைகளை புதிய புதிய மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தான், தங்களது சேவையில் முக்கிய அம்சம் ஒன்றை சொமேட்டோ அறிவித்துள்ளது. அது என்ன என்றும், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

புதிய சேவையை அறிமுகம் செய்த சொமேட்டோ

சொமேட்டோ வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கடைகளில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்வதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. அந்த கடை வாடிக்கையாளரின் வீட்டில் இருந்து தொலைவில் இருந்தாலும் உணவு ஆட்ரர் செய்யும் வகையில் லிமிட்லஸ் டெலிவரி (Limitless Delivery) என்ற ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கடைகளில் இருந்து உணவுகளை வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 வரை விலை உயர்த்தும் லாவா.. பயனர்களுக்கு ஷாக்!

புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட காரணம் என்ன?

இதுவரை சொமேட்டோ குறுகிய இடைவெளியில் உள்ள கடைகளில் இருந்து மட்டுமே உணவுகளை டெலிவரி செய்து வந்தது. அதாவது, பயனர்கள் உணவு டெலிவரி செய்ய செயலிக்குள் சென்றால், அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அதற்கு அருகில் உள்ள கடைகளில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்யும் முறை இருந்தது. ஆனால், இந்த புதிய அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கடைகளில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்துக்கொள்ள முடியும்.

லிமிட்லஸ் டெலிவரி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த லிமிட்லஸ் டெலிவரி அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள உணவகங்களில் இருந்து பிடித்த உணவுகளை ஆர்டர் செய்துக்கொள்ள முடியும். இந்த சேவை முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி என்சிஆர், சென்னை, மும்பை, கொல்கத்தா, பூனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சாட்ஜிபிடி மருத்துவ ஆலோசனையால் பெண் உயிரிழந்ததாக புகார்.. ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு!

இந்த அம்சத்தை இரண்டு முறைகளில் பெறலாம்

இந்த அம்சத்தை இரண்டு முறைகளில் பெற சொமேட்டோ வழிவகை செய்துள்ளது. அதாவது, சொமேட்டோவின் முகப்பு பக்கத்தை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள Explore பக்கத்தை கிளிக் செய்து ஆர்டர் செய்யலாம். இல்லையென்றால் வழக்கம் போல சர்ச் ஆப்ஷனுக்கு சென்று பிடித்த கடைகளில் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us