AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெறும் ரூ.15-க்கு அன்லிமிடெட் ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ!

Jio New Rs 15 Unlimited 5G Plan | ஜியோ நிறுவனம் வெறும் ரூ.15-க்கு தனது அன்லிமிடெட் ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரீச்சார்ஜ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.15-க்கு அன்லிமிடெட் ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Nov 2026 12:51 PM IST

இந்திய பொதுமக்களால் பரவலாக பயன்படுத்தப்படும் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ (Jio) உள்ளது. இந்த நிறுவனம் புதிய புதிய ரீச்சார்ஜ் திட்டங்கள், ஏற்கனவே இருக்கும் ரீச்சார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வெறும் ரூ15-க்கு புதிய அன்லிமிடெட் ரீச்சார்ஜ் திட்டம் (Unlimited Recharge Plan) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன திட்டம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, அந்த திட்டத்தின் வேலிடிட்டி என்ன என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.15-க்கு அன்லிமிடெட் ரீச்சார்ஜ் திட்டம்

ஜியோ நிறுவனம் தனது புதிய அன்லிமிடெட் ப்ரீ பெய்டு ரீச்சார்ஜ் திட்டத்தை (Pre Paid Recharge Plan) அறிமுகம் செய்துள்ளது. அதுவும் வெறும் ரூ.15-க்கு அந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்தால், பயனர்கள் தடையில்லாத 5ஜி நெட்வொர்க் வசதியை பெறுவார்கள். ரீச்சார்ஜ் திட்டத்தை தாண்டியும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும், அதிக வேகம் கொண்ட நெட்வொர்க் தேவை என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் சரியானதாக இருக்கும்.

இதையும் படிங்க : சாட்ஜிபிடி மருத்துவ ஆலோசனையால் பெண் உயிரிழந்ததாக புகார்.. ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு!

ரூ.15-க்கு ரீச்சார்ஜ் : சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.15-க்கான இந்த அன்லிமிடெட் ரீச்சார்ஜ் திட்டம் வெறும் 24 மணி நேரத்திற்கானது ஆகும். இந்த திட்டத்தை 4கே தரம் கொண்ட வீடியோக்களை பார்க்க, அதிக அளவு கொண்ட ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய, ஏதேனும் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க, கேம் விளையாட என அதிக வேகம் மற்றும் தடையற்ற நெட்வொர்க் தேவை உள்ள சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த திட்டம் எதில் கிடைக்கும்?

இந்த புதிய ரீச்சார்ஜ் திட்டம் ஜியோவின் அனைத்து தளங்களிலும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பயனர்கள் மை ஜியோ செயலி (My Jio App) அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். தற்போதுள்ள கூடுதல் ரீச்சார்ஜ் திட்டங்கள் குறிப்பிட்ட அளவு டேட்டாவை மட்டுமே வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தினசரி டேட்டா முடிந்த பிறகு, டேட்டாவின் தேவை உள்ளவர்களுக்கு அந்த திட்டங்கள் சரியாக இருக்கும்.

இதையும் படிங்க : முற்றிலும் புதிய மாற்றங்களுடன் மோட்டோரோலோ சிக்னேச்சர் 27 – எப்போ அறிமுகம்?

ஜியோவின் இந்த புதிய திட்டமோ அன்லிமிடெட் டேட்டா சேவையை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 24 மணி நேரம் மட்டும் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us