AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீனா அறிமுகம் செய்த புதிய பாம்பு ரோபோட்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. வியக்க வைக்கும் புதிய படைப்பு!

China's New Snake Robot | சீனா பல்வேறு அட்டகாசமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தி வருகிறது. அந்த வகையில் தான் புதிய பாம்பு ரோபோட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோட் தானாகவே இயங்கி மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை சரிப்பார்க்குமாம்.

சீனா அறிமுகம் செய்த புதிய பாம்பு ரோபோட்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன.. வியக்க வைக்கும் புதிய படைப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Oct 2026 16:35 PM IST

உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியில் (Technology Development) மிக வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்றால், அந்த வரிசையில் முதலில் நிற்பது சீனாவாக (China) தான் இருக்கும். தற்போது உலக நாடுகள் 2026 ஆம் ஆண்டில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் நிலையில், சீனா மட்டும் 2050-ல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. ஏற்கனவே உலக நாடுகளை தனது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் வாய் பிளக்க வைத்து வரும் சீனா, தற்போது மேலும் ஒரு அட்டகாசமான படைப்பை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பயன்பாட்டுக்கு வந்த பாம்பு ரோபோட்

சீனாவின், யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதியில் உள்ள மின் கம்பிகளில் பாம்பு போல ஊர்ந்துச் சென்று பழுதுகளை ஆய்வு செய்யும் அதிநவீன பாம்பு ரோபோட் (Snake Robot) ஒன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யவும், சிக்கல்களை கண்டுபிடிக்கவும் இந்த ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த ரோபோட்டில் உள்ள அதிநவீன கேமராக்கள், அகச்சிவப்பு உணரிகள் மற்றும் தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் ஆகியவை அதிகப்படியான வெப்பம் ஆகிய ஆபத்துக்களை துல்லியமாக கண்டறிந்து செயலாற்றும்.

இதையும் படிங்க : ஐபேட் மினியை அறிமுகம் செய்த ஆப்பிள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?.. முழு விவரம் இதோ!

மனிதர்களால் செய்ய முடியாததை செய்யும் ரோபோக்கள்

இந்த ரோபோக்கள் மின் கம்பிகள் மீது பாம்புகளை போல ஊர்ந்துச் செல்லும். இவை மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கூடச் சென்று, மின் கம்பிகளில் உள்ள பழுதுகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணும். இந்த ரோபோக்களை சார்ஜ் செய்யவோ அல்லது பேட்டாரி பொருத்தவோ அவசியம் இல்லை. இந்த ரோபோக்கள் மின்சார வயர்களின் மீது ஊர்ந்துச் செல்லும்போது மின்கம்பிகளில் இருந்தே நேரடியாக மின்சாரத்தை பெற்றுக்கொண்டு தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.

இதையும் படிங்க : ஜனவரி முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்.. ஆக்டிவ் சிம் கார்டை கட்டாயமாக்கிய அரசு!

இந்த ரோபோவின் பயன்கள் என்ன என்ன?

இந்த ரோபோக்கள் மின்சார விநியோகத்தில் ஏற்படும் திடீர் மின்தடைகளை முன்கூட்டியே தடுத்து, மின் கட்டமைப்பை தடையின்றி பராமரிக்க பெரும் உதவியாக இருக்கும். இவை மனிதர்கள் செல்ல முடியாத ஆபத்தாக இடங்களுக்கும் சென்று, மனித உதவி இல்லாமலே தானாவே பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us