AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கரூரில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த நபர்.. ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போர்மேன்.. லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை!

Karur EB Foreman Arrested : கரூர் மாவட்டத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேனை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .

கரூரில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த நபர்.. ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போர்மேன்.. லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை!
கரூரில் கைதான மின்வாரி போர்மேன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 30 Oct 2026 17:50 PM IST

கரூர் மாவட்டம், ராயனூர் பகுதியில் மின்வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கரூர் பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவர் புதிதாக கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி ஆன்லைன் வழியாக விண்ணப்பித்திருந்தார். அப்போது, இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் விசாரிக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த மின்வாரிய போர்மேன் அக்னீஸ்வரன் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன்

இதை ஏற்காத போர்மேன் பணம் கொடுத்தால் தான் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வேன் என்று தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் அவர் கேட்ட ரூ. 4 ஆயிரம் பணத்தை சரவணன் கொடுத்தார். பின்னர், இது தொடர்பாக, சரவணன் கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான் தலைமையிலான போலீசார் ராயனூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்றனர்.

மேலும் படிக்க: சென்னை ரயிலில் நள்ளிரவில் டமார் சத்தம்.. நெருப்பு பொறியுடன் வெடித்து சிதறிய பவர் பேங்க்.. அலறியடித்த பயணிகள்!

போர்மேனை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

அங்கு, போர்மேன் அக்னீஸ்வரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற போர் மேன் அக்னீஸ்வரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில்,  அவர் புதிய மின் இணைப்புக்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, போர்மேன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

விஏஓ மற்றும் உதவி மின் பொறியாளர் கைது

இதே போல, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க கோரி விண்ணப்பித்த விவசாயியிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். மதுரை அருகே நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்த முதியவரிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டு பணியை இழுத்தடித்த கிராம நிர்வாக அலுவலர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க: சொந்த ஊர் செல்ல பணம் தேவை.. மருமகன்- மாமியார் கூட்டு சேர்ந்து கொள்ளை.. தஞ்சாவூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Follow Us