AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. நள்ளிரவில் இரு முறை தட்டப்பட்ட கதவு.. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!

Gingee Girl Missing Case : செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவத்தில் அவரது உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் 2- ஆம் கட்டமாக விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமி மாயமான இரவு மூதாட்டியின் வீட்டின் கதவு தட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. நள்ளிரவில் இரு முறை தட்டப்பட்ட கதவு.. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!
மாயமான சிறுமி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Oct 2026 19:16 PM IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் வசித்து வரும் வடிவேலு, பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி இரவு திடீரென காணாமல் போனார். இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில், சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு எஸ். பி. வேல்முருகன், டி. எஸ். பி. கீதா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 நாட்களாக சிபிசிஐடி மேற்கொண்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை 7- ஆவது நாளாக சிபிசிஐடி 2- ஆம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

4 பிரிவாக பிரிந்து விசாரணை மேற்கொள்ளும் சிபிசிஐடி போலீஸ்

சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளாக பிரிந்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இதில், சிறுமி படித்த ஆழம் பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்ற சிபிசிஐடி எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தனர். மேலும், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் பள்ளி நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

மேலும் படிக்க: கொலை செய்யனுமா? Call Me.. அரசு பேருந்தில் பயணிகளை அலறவிட்ட வாசகம்!

சிறுமியின் சகோதரி- தோழிகளிடம் விசாரணை

இதேபோல, மற்றொரு சிபிசிஐடி பிரிவு போலீசார் சிறுமியின் சகோதரி படித்து வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தனியார் கல்லூரி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், சிறுமியின் சகோதரி, அவரது சக தோழிகள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
அத்துடன் சிறுமியின் அக்காவுக்கு பார்க்கப்பட்டுள்ள மாப்பிள்ளையிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது மட்டும் நன்றி கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் சி.டி.ஆர். பதிவுகள் மற்றும் செல்போன் டவர் தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இரு முறை தட்டப்பட்ட மூதாட்டி வீட்டு கதவு

இதனிடையே, சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியில் அமைந்துள்ள தனி வீட்டில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சிறுமி காணாமல் போன இரவு இந்த மூதாட்டியின் வீட்டின் கதவு இரவு நேரத்தில் இரு முறை தட்டப்பட்டதாக அக்கம், பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்களிடம் மூதாட்டி தெரிவித்துள்ளார். இந்த தகவல் காட்டு தீ போல பரவிய நிலையில், அந்த மூதாட்டியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: சிறுமி மாயமான வழக்கில் புதிய தகவல் – புதிய கோணத்தில் விசாரணை

Follow Us