AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மது அருந்த பணம் தர மறுத்த பெரியம்மா.. ஆத்திரத்தில் கண்ட துண்டமாக வெட்டிய மகன்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

Thoothukudi Murder : தூத்துக்குடி மாவட்டத்தில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த பெண்ணை அவரது உறவின ர் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்தச் சம்பவம் அவரை போலீசார் கைது செய் து விசாரித்து வருகின்றனர் .

மது அருந்த பணம் தர மறுத்த பெரியம்மா.. ஆத்திரத்தில் கண்ட துண்டமாக வெட்டிய மகன்.. தூத்துக்குடியில் பரபரப்பு!
கோப்புப்படம் Image Source: social media
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Oct 2026 17:44 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கந்தன் காலனி 3- ஆவது தெரு மேற்கு பகுதியில் வசித்து வருபவர் சித்திரவேல். இவரது மனைவி சசிகலா ( 47 வயது). தம்பதிக்கு நிரஞ்சன் குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சித்திரவேல், கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகன் நிரஞ்சன் குமாருக்கு திருமணம் ஆகி சங்கர் காலனியில் தனியாக வசித்து வருகிறார். மகள் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இதன் காரணமாக சசிகலா மட்டும் தனது வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், சசிகலா அவர்கள் வீட்டின் மாடியில் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது.

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய உருவம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ், தென்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், சசிகலாவின் தங்கை மகன் விக்னேஷ் என்ற முனீஸ் ( 27 வயது) உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், போலீசாரின் சந்தேக பார்வை விக்னேஷ் பக்கம் திரும்பியது.

மேலும் படிக்க: நம்பி விட்ட இடத்தில் கைவரிசை.. வடபழனியில் தோழி வீட்டில் 30 பவுன் நகை அபேஸ்.. புதுச்சேரியில் பதுங்கிய நபர் சிக்கியது எப்படி?

மது அருந்த பணம் தர மறுத்த பெண் கொலை

இதைத் தொடர்ந்து, விக்னேஷை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மது அருந்துவதற்காக தனது பெரியம்மா சசிகலாவின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வருவது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று பிற்பகலில் மது அருந்துவதற்காக அவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டேன். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்து என்னை திட்டினார். இதில், எனக்கும், சசிகலாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அரிவாளாலை கொடூரமாக வெட்டி கொலை செய்தேன்

இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அப்போது, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சசிகலாவை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தேன். பின்னர், அவர் அணிந்திருந்த சங்கிலி, கம்மல், வளையல் உள்ளிட்ட 4 பவுன் நகைகளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். இந்த நகைகளை விற்று அதில் வரும் பணத்தில் குடிக்க திட்டமிட்டேன். ஆனால், போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: ராணிப்பேட்டையில் குழந்தை கடத்தல்.. தவெக ஆதரவாளர் அதிரடி கைது.. வேலூர் மத்திய சிறையில் அடைப்பு!

Follow Us