AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நம்பி விட்ட இடத்தில் கைவரிசை.. வடபழனியில் தோழி வீட்டில் 30 பவுன் நகை அபேஸ்.. புதுச்சேரியில் பதுங்கிய நபர் சிக்கியது எப்படி?

Vadapalani 30 Sovereign Gold Theft : சென்னையில் வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற வழக்கில் தொடர்புடைய நபர் புதுச்சேரியில் பதுங்கி இருந்த நிலையில், அவரை வடபழனி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

நம்பி விட்ட இடத்தில் கைவரிசை.. வடபழனியில் தோழி வீட்டில் 30 பவுன் நகை அபேஸ்.. புதுச்சேரியில் பதுங்கிய நபர் சிக்கியது எப்படி?
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Oct 2026 19:32 PM IST

சென்னை மாவட்டம், வடபழனி பகுதியில் வசித்து வருபவர் நந்தினி. இவர், சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக, தனது வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகையை எடுப்பதற்காக சென்ற போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது, வீட்டின் பல்வேறு பகுதிகளில் நகையை தேடிய நிலையில் எங்கும் கிடைக்கவில்லை. இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த நந்தினி இது தொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் அவரது வீட்டுக்கு வந்து சென்றவர்கள் குறித்த விவரங்களையும் நந்தினியிடம் கேட்டு பெற்றனர்.

விசாரணைக்கு வர மறுத்த பெண்ணின் குடும்ப நண்பர்

அதன் அடிப்படையில் நகை காணாமல் போன குறிப்பிட்ட நாட்களில் அவரது வீட்டுக்கு வந்து சென்ற அனைத்து நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், நந்தினியின் நண்பரான சிவ செந்தூர பாண்டியன் என்பவர் மட்டும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால், அவர் மீது போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக சிவ செந்தூர பாண்டியன் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்தனர்.

மேலும் படிக்க: சோப்பு- ஷாம்புவால் ஆற்றில் நுரையா? அமைச்சர் பொறுப்பற்று பேசலாமா? நறுக் குட்டு வைத்த தவாக வேல்முருகன்!

புதுச்சேரியில் பதுங்கி இருந்தவரை தூக்கிய போலீஸ்

அதன் அடிப்படையில், அவர் புதுச்சேரியில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன்படி, புதுச்சேரிக்கு விரைந்த வடபழனி போலீசார் அங்கு இருந்த சிவ செந்தூரபாண்டியனை பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நந்தினியின் குடும்பத்தினருடன் சிவ செந்தூர பாண்டியன் ஒரு குடும்ப உறுப்பினர் போல பழகி வந்துள்ளார். இதனால், அடிக்கடி நந்தினியின் வீட்டுக்கு சிவசெந்தூர பாண்டியன் சென்று வந்துள்ளார். இதனால், நந்தினியின் வீட்டு சாவி மற்றும் பீரோ சாவி ஆகியவை இருக்கும் இடம் சிவ செந்தூர பாண்டியனுக்கு தெரிந்துள்ளது.

நகை திருட்டில் ஈடுபட்டது எப்படி

அதன்படி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகையை திருடுவதற்கு செந்தூரப் பாண்டியன் திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று நந்தினியின் வீட்டுக்கு சென்ற சிவ செந்தூரப் பாண்டியன் பீரோ சாவியை எடுத்து அதனைத் திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 30 பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு புதுச்சேரிக்கு சென்று தலைமறைவானது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சுமார் 15.5 பவுன் நகைகள், ரூ.7.30 லட்சம் ரொக்கம், வங்கி கணக்கில் இருந்து ரூ.4.25 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!

Follow Us