AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி வழக்கில் சிக்குகிறாரா ஜான் பாண்டியன்.. புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை.. முழு விவரம் என்ன!

SIT Team Question John Pandian : ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் பேரம் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஜெம் வீரமணி வழக்கில் சிக்குகிறாரா ஜான் பாண்டியன்.. புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை.. முழு விவரம் என்ன!
ஜெம் வீரமணி- ஜான் பாண்டியன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Oct 2026 20:07 PM IST

தமிழகத்தில் 10- க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மூலமாக பேரம் பேசப்பட்டதாக காங்கிரஸ் பட்டியல் இன தலைவர் ரஞ்சன் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பாக காவல்துறையில் புகார் மனுவும் அளித்திருந்தார். இந்த நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் விசாரணைக்கு ஆஜராக கோரி சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில், சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஜான் பாண்டியன் இன்று புதன்கிழமை ( அக்டோபர் 28- ஆம் தேதி) ஆஜராகினார்.

ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வ குழு விசாரணை

அவரிடம், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ஜெம் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் என்ன பேரம் பேசப்பட்டது என்பன உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரம் வெளிவந்த போது அண்மையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், வீரமணிக்கும், சாந்திக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.

மேலும் படிக்க: கட்டுக்கட்டாக பணத்துடன் கண்டெய்னர் லாரி.. துப்பாக்கியுடன் சுற்றி நின்ற போலீசார்.. சேலத்தில் நள்ளிரவில் பரபரப்பு!

தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறுவது என்ன

இதில், காங்கிரஸ் பட்டியல் இன தலைவர் அழைப்பின் பேரில் தான், சமரச பேச்சு வார்த்தைக்கு நான் சென்றேன். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. ஜெம் வீரமணி தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமானவர் என்பன உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான், காங்கிரஸ் நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜான் பாண்டியன் சமரசம் பேசியது ஏன்

ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் புகாரில், அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளர் கணேசன், ஓட்டுநர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், வீரமணியை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு காவல் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், சாந்தி தலையிட்ட நிலையில், வீரமணிக்கும், அவருக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், சமரசம் பேசுவதற்காக ஜான்பாண்டியன், ஒருவர் மூலமாக சாந்தி அணுகி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: சிறைவாசம் அனுபவிக்கும் அன்பில் மகேஷ்.. முதல் வகுப்பில் என்னென்ன வசதிகள் வழங்கப்படும்.. அடேங்கப்பா லிஸ்ட் பெருசா போகுது!

Follow Us