AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருச்சி விமான நிலையத்தில் அதிர்ச்சி.. பயணி உடைமையில் நெளிந்த உயிரினம்.. டிஆர்ஐ அதிகாரிகள் ஷாக்!

Trichy Airport Wild Animals Smuggling : பாங்காக்கில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு ஊர்வன வன விலங்குகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் அதிர்ச்சி.. பயணி உடைமையில் நெளிந்த உயிரினம்.. டிஆர்ஐ அதிகாரிகள் ஷாக்!
பறிமுதல் செய்யப்பட்ட வனஉயிரினங்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 28 Oct 2026 15:45 PM IST

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரிய வகை வனவிலங்குகள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநர அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் கடந்த அக்டோபர் 26- ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாங்காக்கில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக வந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, சந்தேகத்துக்கும் இடம் அளிக்கும் வகையில் இது இந்திய பயணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அவர்களது உடைமைகளிலும் புலனாய்வு அதிகாரிகள் விரிவான சோதனை செய்தனர்.

23 பாம்புகள், 16 மலை பாம்புகள் உள்ளிட்டவை

இதில், 27 உணவு பொட்டலங்களுக்குள் அறிய வகை வனவிலங்குகள் உயிருடன் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதில், 23 பாம்புகள், 16 மலை பாம்புகள், 5 தேகு, ஒரு வெள்ளை உடும்பு உள்ளிட்ட மொத்தம் 45 ஊர்வன உயிரினங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதை அடுத்து, சட்டத்துக்கு புறம்பாக வனவிலங்குகளை கடத்தி வந்த குற்றத்தின் அடிப்படையில் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்தடுத்து பக் பக்.. செஞ்சியை தொடர்ந்து தி.மலையில் 3 சிறுமிகள் மாயம்.. உறைந்துபோன பெற்றோர்கள்!

திருச்சி விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை

அவர்கள் மீது 1962- ஆம் ஆண்டு சுங்க சட்ட விதிகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வன உயிரினங்கள் அனைத்தும் தீவிர விசாரணைக்காக திருச்சியில் விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதனை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் திடீரென மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்கம் உள்ளிட்ட பொருள்கள் கடத்தல் சம்பவம்

அத்துடன், வெளிநாட்டில் இருந்து வந்த இந்திய பயணிகளிடம் இருந்து பாம்புகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக, திருச்சி, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், அம்பர் கிரீஸ், வன உயிரினங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், தற்போது கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டை சேர்ந்த வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இந்தோனேசியாவில் இருந்து வந்த கப்பல்.. டன் கணக்கில் சிக்கிய கொட்டைப்பாக்கு.. தூத்துக்குடியில் அதிரடி காட்டிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்!

Follow Us